மதுரையில் இருந்து வந்த லாரி எட்டயபுரம் அருகே கவிழ்ந்து டிரைவர் பலி !

0


மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி க்கு சென்று கொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன் (வயது 52) என்பவர் ஓட்டினார். 
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்ற போது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு ஒரு வேன் தூத்துக்குடி நோக்கி வந்தது.


வேனை மதுரை கன்னியம் பட்டியை சேர்ந்த பிரகாசம் (31) என்பவர் ஓட்டினார். எதிர் பாராத விதமாக லாரியின் பின்னால் வேன் பயங்கர மாக மோதியது. இதில் லாரி டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
டிரைவர் மோகன் லாரிக்கு அடியில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத் துக்கு தகவல் கொடுக்கப் பட்டது. 

இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings