மிராஜ் 2000 போர் விமானம் - 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசும்!

0
இந்திய விமானப் படையைச் சேர்ந்த 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள், நாட்டின் எல்லையைத் தாண்டி லேசர் வசதி கொண்ட 1,000 கிலோ வெடிகுண்டு களை இலக்குகள் மீது போட்டுள்ளன. 
மிராஜ் 2000 போர் விமானம்


முதல் வெடிகுண்டு இன்று அதிகாலை 3:45 மணிக்கும், அடுத்த தாக்குதல் 3:48 மணிக்கும் அதற்கடுத்த தாக்குதல் 3:58 மணிக்கும் மேற்கொள்ளப் பட்டதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. மொத்த தாக்குதல் ஆபரேஷனும் 19 நிமிடங்களு க்குள் முடிந்து விட்டதாக கூறப்படு கிறது.

முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ் சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். 

இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இதைத் தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இந்திய ராணுவம், இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கர வாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம், தாக்குதல் நடத்தப்பட்டது.

பயங்கர வாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் களமிறங்கிய மிராஜ் 2000 ரக போர் விமானம், கார்கில் யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய விமானம் ஆகும். இதில் பயங்கர வாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. 


இந்திய விமானப்படை ஏறக்குறைய 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி பயங்கர வாதிகளின் முகாம்களை அழித்தது என தகவல் வெளியாகி யுள்ளது. இந்த மிராஜ் 2000, பிரான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஃபேல் விமானத்திற்கு இணை யானதாகும். இது மிக உயரத்தில் இருந்து லேசர் நுட்பத்தில் குண்டு போடும் ஆச்சரியம், இந்த விமானத்தின் சிறப்புகளில் ஒன்று.

2011 - 2012ஆம் ஆண்டில் மிராஜ் 2000 விமானத்தின் திறன்களை மாற்றி அமைக்க ரூ.17,547 கோடி மதிப்பில் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தத்தம் போடப்பட்டது. இதில் இரண்டு மிராஜ் 2000 விமானங்கள் தசால்ட் ஏவியேஷன் மூலம் மேம்படுத்தப் பட்டது. 

மீதம் 47 போர் விமானங்களும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தால் மேம்படுத் தப்பட்டது. 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய விமானப் படைக்கு இந்த விமானம் வந்ததற்கு காரணம் பாகிஸ்தான். 

ஆமாம், அந்த நாடு அமெரிக்கா விடம் இருந்து F16 ரக போர் விமானங்களை வாங்கியதும், அதைவிட சக்தி வாய்ந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து இறக்கு மதி செய்தது, இந்தியா.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings