மக்களவையின் கடைசி அலுவல் நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள தாகப் பெருமிதம் தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமை யிலான அமைச்சரவைக்கு இன்று மக்களைவை கடைசி அலுவல் நாளாக அமைகிறது.
இதனை முன்னிட்டு இன்று மக்களவை யில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து ஆண்டு ஆண்டு ஆட்சிக்குப் பிறகு இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது என்று கூறினார்.
இந்த அமைச்சரவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கை யில் பெண்களுக்கு இடம் அளித்துள்ள தாகவும் 44 பெண்கள் முதல் முறையாக எம்.பி.யாக தேர்வாகி யுள்ளனர் எனவும் தெரிவித்த மோடி, இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடை பெறுகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
"கடந்த 4 ஆண்டுகளில் தான் அதிக அளவு செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப் பட்டன. வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்திய தலைவர் களை மதிக்க தொடங்கி யுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது." என்றார்.
"நாட்டின் தன்னம்பிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக் கிறது. இத்தகைய உறுதித் தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகும். உலகமே புவி வெப்ப மயமாதல் பற்றி விவாதித்துக் கொண்டிருக் கிறது.
இந்தியா அதற்காக சர்வதேச சோலார் கூட்டமைப்பை அமைத்துள்ளது. இந்த அவை கருப்புப் பணம் மற்றும் ஊழலை எதிர்க்கும் சட்டங்களை நிறைவேற்றி யுள்ளது. ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றி யுள்ளது." எனவும் மோடி தன் உரையில் கூறினார்.
Thanks for Your Comments