அனில் அம்பானி தற்போது சந்தித்து வரும் நிதி நெருக்கடி களின் பின்னணி யில் அவரது அண்ணன் முகேஷ் அம்பானி இருப்பதாக வெளியாகி யுள்ள தகவல் மும்பை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.550 கோடியை ஒரு மாதத்திற்குள் செலுத்த வில்லை யென்றால், கைது செய்து விடுவோம் என அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனில் அம்பானியின் இந்த திடீர் நிதி நெருக்கடி க்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி யிருக்கிறது. அதாவது, தனக்குச் சொந்தமான ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவன சொத்துக்களை, முகேஷ் அம்பானி யிடம் விற்று கடனை அடைக்க அனில் அம்பானி திட்ட மிட்டிருந் துள்ளார்.
இதனை முன் கூட்டியே அறிந்த முகேஷ் அம்பானி, அனில் அம்பானியின் பழைய கடன்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்றும், அரசு தரப்பில் உத்தரவாதம் தந்தால் சொத்துக் களை வாங்கத் தயார் என்றும் தொலைத் தொடர்பு துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தில் தொலை தொடர்புத் துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி, அனில் அம்பானியின் தற்போதைய நிதி நெருக்கடி களுக்கு முகேஷ் அம்பானியின் அந்த கடிதம் தான் துவக்கப்புள்ளி என்கின்றனர் விவர மறிந்தவர்கள்.
மேலும், தம்பியின் கடனை அடைக்க அண்ணன் கை கொடுக்கா ததோடு, முட்டுக் கட்டையும் போட்டிருப்பது மும்பை வியாபார வட்டாரங்களில் பரபரப்பான பேசுப் பொருளாக மாறியுள்ளது.
Thanks for Your Comments