வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

0
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத் திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங் களவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்திற்கு பிறகு கொடுமைப் படுத்தியதாக உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். 
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணம்


மேலும் இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங் களில் கட்டுப் பாடுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. 

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய மசோதாவை மாநிலங் களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்ணை திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களு க்குள் அதனை பதிவு செய்ய வேண்டும்

என்றும், தவறும் பட்சத்தில் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும் என கூறப் பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1973ல் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. 
வெளிநாடு வாழ் இந்தியர்கள்


அதன்படி நீதி மன்றங்கள் இந்திய வெளியுறவுத் துறையின் இணைய தளத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சம்மன் அனுப்பலாம், சம்மனிற்கு ஆஜராகாத வர்களின் சொத்து களையும் முடக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாத வெளிநாடு வாழ் இந்தியரை குற்றவாளி யாகவும் அறிவிக்கலாம் என இந்த மசோதாவில் குறிப்பிட் டுள்ளனர். இந்த மசோதாவானது வெளியுறவுத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு, சட்ட அமைச்சகங்கள் கூட்டு முயற்சியாக உருவாக்கி யுள்ளது குறிப்பிடத் தக்கது. 

இது குறித்து தகவலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த மசோதா வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண புகார்களுக்கு தக்க பதிலாக அமையும் என்றும், இதன்மூலம் பெண்கள் தங்களின் வெளிநாடு வாழ் கணவர்களால் சந்திக்கும் இன்னல்கள் குறையும் என்றும் தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings