ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கர வாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானு க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாச மான முறையில் வெளிப் படுத்தி உள்ளார். தள்ளு வண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கை யாளர்களு க்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறி யுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மனித நேயத்தை பாகிஸ்தான் ஒரு போதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால் தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளேன்’ என்றார்.
Thanks for Your Comments