ஆபரேஷன் செய்து கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை !

0
கருவில் முதுகுத் தண்டு வளர்ச்சி யடையாத குழந்தையை, தாயின் வயிற்றில் இருந்து எடுத்து, அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருவறைக்கே பத்திரமாக அனுப்பி வைத்திருக்கி றார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள். 
கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை
`கர்ப்ப காலம் முடிவடைந் ததும் பிரசவம் பார்க்கப்பட்டு, குழந்தை மீண்டும் வெளியே எடுக்கப்படும்' என்று அந்த மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். நவீன மருத்துவம் அசுர வளர்ச்சி யடைந்து கொண்டிருப் பதற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகி யிருக்கிறது. 


இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயதான செவிலியர் பீதன் சிம்சன். திருமணத்துக்குப் பிறகு, சிம்சன் கர்ப்பம் தரித்தார். 20 வாரங்கள் கழித்த பிறகு வழக்கமான ஸ்கேன் பரிசோதனையைச் செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் சிம்சனுக்கும் அவரின் கணவர் கியரோனுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. 

கருவில் இருந்த குழந்தையின் தலை சரியான அளவில் இல்லை என்றும் அதற்குக் காரணம் குழந்தையின் முதுகுத் தண்டுவடம் முழுமையாக வளர்ச்சி யடையாமல் இருப்பதும் கண்டறியப் பட்டது. `இதே நிலையில் குழந்தை பிறந்தால் குழந்தை நடக்க முடியாமல் போகலாம்' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 
முதுகுத் தண்டு வளர்ச்சியடையாத குழந்தை
`மருத்துவர்கள் எங்களுக்கு மூன்று தெரிவுகளைக் (Options) கொடுத்தனர். `இதே நிலையில் கர்ப்பத்தைத் தொடரலாம், கருக்கலைப்பு செய்து விடலாம் அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்து 'ஃபீட்டல் சர்ஜரி' (Fetal surgery) செய்யலாம்... 

இந்த மூன்றில் ஒன்றை நீங்களே தேர்வு செய்யுங்கள்' என்று தெரிவித்தனர். நாங்கள் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தோம்’’ என்கிறார் சிம்சன். பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சவாலான அந்த முயற்சியில் இறங்கினர். 


தாயின் வயிற்றில் இருந்து 24 மாதத்தில் அந்தப் பெண் குழந்தையை வெளியே எடுத்து, முதுகுத் தண்டு வடத்தைச் சீரமைக்கும் அறுவை சிகிச்சையை செய்து, மீதமுள்ள கர்ப்ப காலத்தைத் தொடரும் வகையில் தாயின் கர்ப்பப் பையில் குழந்தையை வைத்து விட்டனர்.
கர்ப்பப் பையில் குழந்தை
`உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தனர். நாங்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெற்று விட்டோம். நம்ப முடியாத வகையில் அந்த அறுவை சிகிச்சையை என் மகள் எதிர் கொண்டாள். 'சிகிச்சை க்குப் பிறகு, மீண்டும் வயிற்றுக்குள் வைத்த பின்னரும் அவள் நலமுடன் இருப்பதாக' மருத்துவர்கள் தெரிவித்தனர். 

வயிற்றில் உதைப்பது மட்டும் இப்போதும் மாறவே இல்லை. வரலாற்றில் இடம் பிடித்து விட்டதால், அவள் எங்களுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!" என்று பூரிக்கிறார் சிம்சன். இங்கிலாந்தில் இதுவரை மூன்று குழந்தை களுக்கு இதே போன்ற சிகிச்சை செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings