காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை உருவாகி யிருக்கிறது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ் சாலையில் புலவாமா மாவட்டம் அவந்திப் போரா பகுதியில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வாகன அணிவகுப்பு சென்று கொண்டிருந்தது. இதை எதிர் பார்த்து காரில் பதுங்கி யிருந்த ஜெய்ஷ் இ முகமது என்கிற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அகமது.
சுமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் நிரப்பப்பட்ட காரை திடீரென மத்திய ரிசர்வ் படை வீரர்கள் அணி வகுப்பு வாகனம் மீது மோதச் செய்து வெடிக்கச் செய்தான். இந்த கார்குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தார்கள். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பயங்கர அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்க பிரதமர் தலைமையில் டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பாகிஸ்தான் பொருளாதார உதவிகளை முதல் கட்டமாக நிறுத்துவ தாக அறிவித் துள்ளது இந்திய அரசு. அடுத்த கட்டமாக, இன்று நள்ளிரவு
அல்லது நாளை அதிகாலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லை யோரங்களில், பாகிஸ்தான் நாட்டுக்குள் பயிற்சி முகாம் நடத்தி வரும் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த முடிவெடுத் துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கு முன்பு, இதேபோல பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. அப்போது அரசியல் ரீதியாக அந்த நாட்டில் எதிர்ப்பு காட்ட வில்லை.
ஆனால், இந்த முறை அந்த மாதிரியான இந்தியத் தாக்குதலை எப்படி பாகிஸ்தான் எதிர் கொள்ளப் போகிறது என்பது தான் சஸ்பென்ஸ் ஸாக இருக்கிறது. ஒரு வேளை, தீவிரவாதிகள் முகாம்களை இந்தியா அழிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு காட்டினால், போராக மாற வாய்ப்புகள் அதிகம். இப்படியே போனால், காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகும்.
பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படலாம். இதை யெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை யில் இறங்கி யிருக்கிறார்கள்.
இது குறித்து, டெல்லியில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும் போது, ``ஆறு மாநிலங்களில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் போது, அங்கெல்லாம் நிம்மதியாக தேர்தலை நடத்த முடியாது.
நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவும் போது அடுத்து வரும் தேர்தலை தள்ளி வைக்க முடியும். இந்தக் கோணத்தில், ஜனாதிபதி அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவிப்பு வெளியிட முடியும். இதற்கான சட்ட ஆய்வுகளை முக்கிய அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்’’ என்கிறார்.
காங்கிரஸ் தரப்பில் கேட்ட போது,``தேர்தலை நேரிடையாக சந்திக்க முடியாமல், இது போன்ற கலவர பீதியை மக்கள் மத்தியில் உருவாக்கி அதன் மூலம் அனுதாபத்தைப் பெறும் நோக்கில் நாடாளுமன்றத் தேர்தலை தள்ளி வைக்க பி.ஜே.பி. திட்டம் போடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. மெஜாரிட்டியில் ஜெயிக்க வாய்ப்பில்லை. இதை நன்றாக தெரிந்து வைத்திருக் கிறார் பிரதமர் மோடி.
2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, போரை வரவழைத்து அதையே காரணங்காட்டி தேர்தலில் ஜெயிக்க பி.ஜே.பி. திட்டம் போட்டது. ஆனால், இந்திய மக்கள் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. பாகிஸ்தான் விஷயத்தில் கடந்த நாலரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார் பிரதமர் மோடி?
தேர்தல் வரும் சூழ்நிலையில் திடீரென அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் முகாம்களை அழிப்பதாக சொல்வது தேர்தல் ஸ்டண்ட். கார் அட்டாக் நடந்த மறு நிமிடமே, இதே அட்டாக்கை நடத்தி யிருக்கலாமே?
அதை விடுத்து, ஒரிரு நாள்கள் கழித்து காலம் தாழ்த்தி தாக்குதலை நடத்தப் போனால், தீவிரவாதிகள் முகாம்களைக் காலி செய்திருக்க மாட்டார்களா? பிறகு எதற்கு இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும்?’’ என்கிறார்கள்.
Thanks for Your Comments