ஹெல்மெட் வாங்க பணம் இல்லைனா, 'பைக்' எப்படி வாங்கினீங்க? என்று பொது மக்களிடம் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பி யிருக்கிறார். புதுச்சேரியில், 'இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம்' எனக் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப் பட்டது.
ஆனால், பொது மக்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தச் சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார் முதல்வர் நாராயணசாமி.
இரண்டு வாரங்களுக்கு முன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதைப் படம் பிடித்து சமூக வலை தளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல் படுத்துமாறு அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரி யில் கடந்த 11-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் மீண்டும் நடைமுறைப் படுத்தப் படுவதாகவும், மீறுபவ ர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் லைசென்ஸும் பறிமுதல் செய்யப்படும் என்றும் டி.ஜி.பி சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்தார்.
அதற்கு முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர் களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்டாயம் ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அதே சமயம், ஸ்பாட் ஃபைன் விதிக்கும் போது பொது மக்களின் நேரம் விரயமாகும் என்பதால், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன எண்களைக் குறித்து வைத்து, நீதிமன்றம் மூலம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் கிரண் பேடி தெரிவித்தார்.
அதன்படி, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 20,000 பேர்களின் வாகன எண்கள் குறிக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற் கான நடவடிக்கை களில் போக்குவரத்துக் காவல் துறை ஈடுபட்டிருக் கிறது.
கிரண் பேடியின் இந்த அதிரடி நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள், ”எங்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கு அரசிடம் பணம் இல்லை என்று எப்படிச் சொன்னீர்களோ, அதேபோல ஹெல்மெட் வாங்கு வதற்கும் எங்களிடம் பணம் இல்லை” என சமூக வலை தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து செய்தி யாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ள கிரண் பேடி, “கடந்த இரண்டு தினங்களில் ஹெல்மெட் அணியாமல் விதிமுறை களை மீறியதாக, சுமார் 30,000 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதற்காக, புதுச்சேரியில் நடமாடும் நீதிமன்றம் கொண்டு வர மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்தையும் விதிமுறை களையும் பாதுகாக்க வேண்டியவர்களே அதை எதிர்ப்பது ஏன்? முதலமைச்சரா... துணைநிலை ஆளுநரா? என்பது இந்த விவகாரத்தில் முக்கியம் இல்லை.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் முக்கியம். கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பாகும். ஹெல்மெட் வாங்க பணமில்லை என்று கூறுபவர் களுக்கு... வாகனம் வாங்கவும் பெட்ரோல் நிரப்பவும் மட்டும் எப்படி பணம் வந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.
Thanks for Your Comments