14 வகையான நெகிழிக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க கோரிய மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தவோ, தயாரிக்கவோ விற்கவோ தமிழகத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஜனவரி 1 முதல் அமலாகியது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களு க்கு தடை விதிப்பதாக, கடந்த 2018 ஜூன் 5-ம் தேதி சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து 14 வகை நெகிழிக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்ய கூடாது என தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, 50 பிளாஸ்டிக் சில்லறை விற்பனை யாளர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 14 வகை நெகிழிக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க, உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்தது.
மேலும், அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் அதற்காக, நெகிழி விவகாரத்தில் வணிகர்களை துன்புறுத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:
கீழே குறிப் பிட்டுள்ள பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகிய வற்றிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
* மக்காத பிளாஸ்டிக் தட்டுகள்
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
* நீர் குவளைகள்
* தண்ணீர் பாக்கெட்டுகள்
* பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்
* பிளாஸ்டிக் கைப்பை
* பிளாஸ்டிக் கொடி.
மாற்று உபயோகப் பொருட்கள்:
* துணிப்பைகள்
* காகித உறைகள்
* மண் குடுவைகள்
* வாழை இலைகள்
* பாக்கு மட்டைகள் தட்டுகள்
* தாமரை இலைகள்
மேற்கொண்ட பொருட்களை பிளாட்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக் கலாம்.
விலக்கு அளிக்கப்படும் பொருட்கள்:
பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக் கான உறை களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப் படுவதாக தமிழக அரசு தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments