இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிட மிருந்து எனக்கு சொல்லிக் கொள்ளும் படியான நற்செய்தி வந்துள்ளது' என்றுள்ளார்.
வட கொரியா, அணு ஆயுதங் களை கைவிடுவது தொடர்பான இறுதி கட்ட பேச்சு வார்த்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையில் இன்று வியட்நாமில் நடைபெற்றது.
அப்போது நடந்த செய்தி யாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப்பிடம், இந்திய- பாகிஸ்தான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
அதற்குத் தான் ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிட மிருந்து எனக்கு சொல்லிக் கொள்ளும் படியான நற்செய்தி வந்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற சூழல் சீக்கிரமே முடிவுக்கு வரும் என நம்புகிறேன்' என்று பதில் கூறியுள்ளார்... NDTV
Thanks for Your Comments