மனிதனின் மூளையை பாதுகாப்பது எப்படி?

2 minute read
0
100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி! இவ்வளவு கலங்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு கலங்களையும் நாம் பயன்படுத்த முடியா விட்டாலும், 
மனிதனின் மூளை
கலங்களைக் கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

ஒருவர் இயற்கைக்கு மாறான ஆழ்ந்த உறக்க நிலை (coma) நிலைக்குச் செல்வதற்கும் இது தான் காரணம்.
கொல்லாதீர்கள்

ஆம், உங்கள் மூளையில் உள்ள கலங்களைக் கொல்லா தீர்கள். என்னது, நமக்கு நாமே மூளை கலங்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலைமுறை யினரிடம் காணப் படுகிறது.

எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "சமநிலையாக" ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. 
மனிதனின் மூளையை கொல்லாதீர்கள்
ஆனால், சிலரைப் பார்த்தால், "பதற்றம்" என்றே சொல்லிக் கொண்டிருப்பர். சரியாகத் தூங்க மாட்டார்கள்; சாப்பிட மாட்டார்கள். இவர்கள் தான் அதிகபட்சம் மூளை கலங்களை "கொல்" கின்றனர். அதாவது, கலங்கள் செயலிழந்து போகின்றன.

தூக்கம் அவசியம்
தூக்கம் அவசியம்
மூளை கலங்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேரத் தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது.

இது தவறல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக் கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
மன அழுத்தம் "இருக்ககூடாது"

தூக்கம் வராமல் இருக்கக் காரணம், பலருக்கும் உள்ள "பதற்றம்" தான். மன அழுத்தம் பல வகையில் இவர்களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக் கொண்டு, தேவை யில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது.
மன அழுத்தம்
"பதற்றம்" பேர் வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை கலங்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், "பதற்றம்" என்று இனி சொல்லா தீர்கள்; மனதை சமப் படுத்துங்கள்.

மதுவா? போ, போ

மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதைத் தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களு க்குப் பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. 
மதுவா?
மது செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை கலங்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.
எக்சோடாக்சின்

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்புச் சத்துள்ள "ஜங்க் புட்" வகை உணவுகளில் "எக்சோடாக்சின்" என்ற ரசாயன சத்து உள்ளது. 
எக்சோடாக்சின்
இப்போதுள்ள இளைய தலைமுறை யினருக்கு "ஜங்க் புட்" தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை கலங்கள் அதிகமாக குறைவதே.
மலிவான உருப்படிகள்

அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சில்லுகள் (Chips) போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப் படுத்திக் கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறை யினருக்கு தெரிவதில்லை. 
சமோசா, Chips
சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதைத் தவிர்ப்பது நல்லது; ருசிக்குச் சாப்பிடும் போது, சுகாதார மானதா என்பதையும் அறிவது முக்கியம்.

தண்ணீர் குடியுங்கள்

தண்ணீர் தாராளமாகக் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.
தண்ணீர் குடியுங்கள்
உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்து க்குக் காரணம் மூளை தான்; மூளை கலங்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக் கூடாது.

தரை சுத்தமாக…

இப்போதெல்லாம், வீட்டை சுத்த மாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்து விட்டன. எதற்கெடுத் தாலும் இந்த ரசாயன கலவையை “திவலைகள்’ (spray) செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. 
தரை சுத்தமாக


ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்ப தால், நம் மூளை கலங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

இது போலத் தான் வர்ணங்கள் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.
காய்கறி, பழங்கள்

இந்த மூளை கலங்கள் பாதிப்பை தவிர்க்க, எளிமையான வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; மருத்துவரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.
காய்கறி, பழங்கள்
பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளி லும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 11, April 2025
Privacy and cookie settings