சிறுமிகளுக்கும், இறைச்சிக் கோழிக்கும் உள்ள தொடர்பு !

0
நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். 
சிறுமிகளுக்கும், இறைச்சிக் கோழிக்கும் உள்ள தொடர்பு
சடங்கு, சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். 
இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் இறைச்சிக் கோழிகளை (Broiler) வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களு க்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர உடல் உறுப்புக் களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) ஊசி போடுவது உண்டாம்.

இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று வேலை செய்கிறதாம். 
குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.
இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும். தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் இறைச்சிக் கோழிக்குத் தான் முதலிடம் என்றாள். பெண்களைப் பெற்றவர்களே! 
இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைக ளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை வைத்தியரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கிய த்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings