ATM கேமராவை ஹேக் செய்த கொள்ளையர்கள் - சென்னையில் !

0
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சாலையில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஹைடெக் கொள்ளையர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 
ATM கேமரா - ATM
அவர்களிடமிருந்து கட்டுக் கட்டாகப் பணமும் போலி ஏ.டி.எம் கார்டுகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 101-ம் அறையில் தங்கியிருந்த 3 பேரை கொல்கத்தா போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் மண்டல் (22), சுகேந்தர்குமார் மண்டல் (23), பாஸ்கர் குமார் (25) எனத் தெரிய வந்தது.

இவர்கள் ஏ.டி.எம் கார்டு மூலம் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் எனக் கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர். 

இதை யடுத்து மூன்று பேரையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்து க்குக் கொல்கத்தா போலீஸார் அழைத்து வந்தனர். 

காவல் நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்ட விசாரணை யில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், ``ஹோட்டலில் கைதான மூன்று பேரும் ஹைடெக் கொள்ளை யர்கள். 

இவர்கள் பல மாநிலங்களில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி வந்துள்ளனர். 

குறிப்பாக, போலி ஏ.டி.எம் கார்டு களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இவர்களிட மிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள், 21 போலி ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. 

வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் வாடிக்கை யாளர்களைக் குறி வைத்து இந்தக் கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது. 
கொள்ளையர்கள்
சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கை யாளர்களின் நடவடிக்கை களை அவர்களுக்கே தெரியாமல் முதலில் கண்காணிப் பார்கள். ஏ.டி.எம் கார்டு, 

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் ரகசிய பின் நம்பர்கள், கார்டுகளின் விவரங்களைச் சேகரிப்பார்கள். இதற்கென தனிநெட்வோர்க் இந்தக் கும்பலிடம் உள்ளது. 

அந்த விவரங்கள் அடிப்படையில் போலி கார்டுகள் தயாரிக்கப்படும். பிறகு ஏ.டி.எம் மையங் களுக்குச் சென்று மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு தப்பி விடுவார்கள். 

போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை யாக இந்தக் கும்பல் செயல் பட்டுள்ளது. 

அதாவது, ஒரு மாநிலத்தில் மோசடி செய்து விட்டு அடுத்த மாநிலத்துக்குத் தப்பிச் சென்று விடுவார்கள். 

இதனால் இந்தக் கும்பலைப் பிடிக்க முடிய வில்லை. இந்தக் கும்பலை பல மாநிலப் போலீஸார் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் தான் கொல்கத்தா சைபர் கிரைம் போலீஸாரு க்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் வைத்து மூன்று பேர் சிக்கியுள்ளனர். 
அவர்கள் மூன்று பேரும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அதாவது, ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தங்களின் முகம் தெரியாம லிருக்கவும் புத்திச்சாலித் தனமாகச் செயல் பட்டுள்ளனர். 

அதற்காக அவர் பயன்படுத்திய தொழில் நுட்பம் எங்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி யுள்ளது. 
சிசிடிவி கேமரா
அது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது, `சிசிடிவி கேமராவை கூட எங்களால் ஹேக் செய்ய முடியும்’ என்று கூறினர். 

அது சாத்தியமா என்று விசாரித்து வருகிறோம். போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து அதன்மூலம் மோசடி செய்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். 

மூன்று பேரும் எப்போதும் விலை உயர்ந்த உடைகளை அணிந்து தங்களின் விருப்பம்போல சொகுசாகவே வாழ்ந்துள்ளனர். 

லட்சக் கணக்கில் பணம் இருந்ததால் நட்சத்திர ஹோட்டல் களிலேயே தங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும், விலை உயர்ந்த செல்போன் களையே பயன்படுத்தி வந்துள்ளனர். 

இவர்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரித்து வருகிறோம். 

அதே நேரத்தில் ஏ.டி.எம். மோசடி கும்பல் தமிழகத்தில் கைவரிசை காட்டியுள்ளதா என்றும் விசாரணை செய்து வருகிறோம்" என்றனர். 
போலி ஏ.டி.எம் மோசடியில் மூன்று வடமாநில வாலிபர்கள் சிக்கியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

அவர்கள் இதுவரை மோசடி செய்த பணத்தை என்ன செய்தார்கள், அவர்களின் பின்புலம் என்ன என்பது விசாரணை நடந்து வருகிறது. 

சென்னையில் பிடிபட்ட மூன்று பேரையும் கொல்கத்தா போலீஸார் நேற்றிரவே அழைத்துச் சென்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings