சிதறி கிடந்த வீரர்களின் உடல்கள், கேட்க முடியாத கதறல் !

0
புல்மாவா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி நடந்த தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுமார் 70 வாகனங் களில் பணிக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது 350 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப் பட்ட கார் இடையில் உள்ள வீரர்களின் வாகனத்தில் மோதி வெடித்து சிதறியது.
இதில், 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலை நேரில் பார்த்த சகவீரர்கள் உருக வைக்கும் தகவல்கள் பகிர்ந் துள்ளனர். ஜஸ்விந்தர் பால் என்கிற வீரர் பகிர்ந்து கொண்ட தாவது, வெடித்து சிதறிய வாகனத்தில் இருந்து இரண்டு வாகனங்கள் தள்ளி தான் நான் இருந்தேன். 


குண்டு வெடித்ததும் நாங்கள் அனைவரும் பதறிப் போய் வாகனத்தில் இருந்து ஓடிப்போய் பார்த்தோம். சாலைகள் முழுவதும் இறந்துபோன எங்களது வீரர்களின் உடல்கள் சிதறிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தோம், காயமடைந் தவர்களின் கதறல் சத்தத்தை கேட்கவே முடிய வில்லை. 

உடனடியாக காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி அளித்தோம், தாக்குதல் நடந்த இடத்தில் ஒரு வித மாயான அமைதி நிலவியது என கடைசி நிமிடங்களை பகிர்ந்துள்ளார். டேனிஷ் சந்த் என்ற வீரர் கூறியதாவது, நான் குண்டு துளைக்காத வாகனத்தில் இருந்தேன். 

தாக்குதல் நடந்த 3 நாட்களாக எனக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரியாமல் எனது குடும்பத்தார் கடும் வேதனைக் குள்ளாகி யுள்ளனர். 3 நாட்கள் கழித்து தான் நான் உயிரோடு இருப்பது எனது குடும்பதி னருக்கு நண்பர் மூலமாக தெரிவித்தேன் என கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings