ராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு

0
திருபுவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து கும்பகோணம் பகுதியில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கண்டனப் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி சென்ற 140 பேரை போலீஸார் கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க பிரமுகர் ராமலிங்கம்
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க-வின் முன்னாள் நகர செயலாளராக இருந்தவர் மதமாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக ராமலிங்கம் கடந்த 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப் பட்டார். 

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் திருவிடை மருதூர் போலீஸார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ள தோடு கொலையாளிகள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. 


மேலும், இன்று கடையடைப்புப் போராட்டத் துக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. மேலும், பேரணி நடத்துவதற்கும் அனுமதி கேட்டிருந்தனர். நேற்று அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலை யில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. 

ஆனால், தடையை மீறி பேரணியை நடத்துவோம் என இந்து அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கூறினர். இதை யடுத்து இன்று கும்பகோணம், திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள சுமார் 7,000 கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. இதற்கிடையில் தமிழக காவல்துறை சட்டம் 30(2) -ன் கீழ் உத்தரவும் பிறப்பிக்க பட்டது. 
கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு
அதன்படி, கும்பகோணம் பகுதியில் 11-ம் தேதியில் இருந்து அடுத்த 15 தினங்களுக்கு காவல்துறை அனுமதி பெறாமல் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 

தடை உத்தரவை மீறி யாரும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் மகேஸ்வரன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி-க்கள் பாலச்சந்திரன், அன்பழகன் மேற்பார்வையில் டி.எஸ்.பி-க்கள் செங்கமலகண்ணன், 

கணேசமூர்த்தி, முருகேசன், ஜெயசீலன், மகேசன், நாகராஜ் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் கும்பகோணம் காந்தி பூங்கா, திருபுவனம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்குக் குவிக்கப் பட்டனர்.

இந்நிலையில் ராமலிங்கம் கொலையைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்தபடி இன்று அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் கும்பகோணம் மகாமகக் குளம் வீரசைவ மடத்திலிருந்து கண்டன பேரணியாகப் புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கி வந்தனர். 


பேரணி நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் வரும் போது அவர்களைப் போலீஸார் தடுத்தனர். இதை யடுத்து பேரணியாக வந்தவர்கள் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ராமலிங்கம் கொலை
இதேபோல் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன்சம்பத் இன்று திருபுவனம் சென்று ராமலிங்கம் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அங்கிருந்து கும்பகோணத்து க்கு தன் ஆதரவாளர் களுடன் வந்த போது, அவரை செட்டிமண்டபம் அருகே போலீஸார் வழிமறித்து கைது செய்தனர். 

கும்பகோணத்தில் இரண்டு இடங்களில் 7 பெண்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்து அமைப்புகள் கடை யடைப்புக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் கும்பகோணம் பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப் பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings