தொடர்ந்து இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள் !

0
வெகு நேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன் படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.
தொடர்ந்து இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள் !
அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும் போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். வெகு நேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன் படுத்துவதால், 

காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமை யாகவே காது கேளாமை வந்து விடும்.

* காதில் தொடர் இரைச்சல் கேட்கத் தொடங்கும்.

* தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.

* அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும்.

* காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் போகும்.

பரிசோதனை முறைகள்:
* இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.

* முதல்கட்டமாக, அடிப்படையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, காதின் உட்பகுதியில் பாதிப்பு உள்ளதா, 

காதின் நடுப்பகுதியில் பாதிப்பு உள்ளதா, நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.

* அடுத்த கட்டமாக, ஆடியோலாஜிக்கல் (Audiological test), ஆடியோகிராம் (Audiogram) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும் காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதிசெய்யப்படும்.

தீர்வுகள்:
தொடர்ந்து இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள் !
பொதுவாகவே, காது கேளாமை பாதிப்பு வந்தால், அந்தப் பாதிப்பைக் குணப் படுத்துவது கொஞ்சம் கடினம் தான். நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டால், அதைக் குணப் படுத்துவது மிகவும் கடினம். 

நரம்புகளின் பாதிப்பு போல, காது தொடர்பான மற்ற பாதிப்புகளுக்கும் இது 95 சதவீதம் வரை பொருந்தும். ஒரு முறை செவித்திறன் குறைந்து விட்டால், மீண்டும் அதைப் பெறுவது என்பது கடினமான காரியம்.

ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி மேலும் செவித்திறன் குறையாமல் இருக்கச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால், காது கேட்கும் கருவியைப் பயன் படுத்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings