கரும்புத் தோட்டத்து க்குள் முகாமிட்டு வரும் சின்ன தம்பிக்கு வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி விட்டனர். சின்ன தம்பியை பத்திரமாக பிடிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தர விட்டுள்ளது. இதனால் கண்ணாடிப் புத்தூரில் முகாமிட்டுள்ள சின்ன தம்பியை பிடிக்க வனத்துறை யினரும் ஆயத்த மானார்கள்.
ஆனால் இன்னமும் அவர்களுக்கு யானை போக்கு காட்டி தான் வருகிறது. நேற்று முன்தினம், கரும்பு தோட்டத்தில் இருந்து வாழைத் தோட்டத்துக்கு ஷிப்ட் ஆனான் சின்னதம்பி, அங்கே பயிர்களை மூடி வைக்க ஒரு சாக்குப்பை இருந்தது. அது சின்னதம்பி கண்ணில் பட்டுவிட ஒரே விளையாட்டு தான்.
விளையாட்டு
தும்பிகையால் சாக்கு பையை எடுத்து தலையில் போட்டுக் கொள்வதும் மேலே சுழற்றி வீசி வாலால் பிடிப்பதும், தும்பிக்கை யால் இருபுறமும் பிடித்து கொண்டு அடிப்பதும், பின்னங் கால்களால் உதைப்பதும் என தன்னை மறந்து சின்னத்தம்பி விளையாடி கொண்டிருந்தான்.
உற்சாக குரல்
இதைப் பார்த்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். மக்களின் கைதட்டல், உற்சாக குரலை கேட்டதும் சின்ன தம்பிக்கு சந்தோஷம் தாங்க வில்லை. பதிலுக்கு சின்ன தம்பியும் உற்சாக குரல் எழுப்பியது. இப்படியே சாக்குப்பை விளையாட்டு அரை மணி நேரம் நீடித்தது.
கரும்பு தோட்டம்
ஆனால் இதை யெல்லாம் ஒரு புறம் ரசித்தாலும் எப்படி சின்ன தம்பியை பிடிப்பது என்பதில் தான் வனத்துறை யினரின் கவனம் முழுதும் உள்ளது. நேற்று சாயங்காலம் 4 மணி போல, கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பி வெளியே வந்தான்.
வனத்துறை அலர்ட்
அவனுக்கு வனத்துறை யினர் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பலா பழங்களை தந்தார்கள். சாப்பிட்டுவிட்டு எப்படியும் முன்னேறி வரும், அப்போது பிடித்து விடலாம் என வனத்துறை யினரும் அலர்ட்டாக இருந்தார்கள்.
ஆனால் பலாப்பழத்தை சாப்பிட்ட கணமே அடுத்த செகண்ட் கரும்புத் தோட்டத்து க்குள் ஒரே ஓட்டமாக ஓடி விட்டான் சின்னதம்பி.
நம்பிக்கை
அதனால் சின்ன தம்பியை தொடர்ந்து வனத்துறை யினர் கண்காணித்து வந்தனர். இன்றைக்கு எப்படியும் சின்ன தம்பியை பிடித்து விடலாம் என்று வனத்துறை யினர் நம்பிக்கை யுடன் சொல்லி இருந்தனர். அதன் படியே செய்தும் காட்டி விட்டனர்.
மயக்க ஊசி
கரும்பு தோட்டத்தில் இருந்து மீண்டும் வெளியே வந்த சின்னத் தம்பிக்கு வனத்துறையினர் துப்பாக்கி மூலம் காலை 7 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தினார்கள்.
ஆனால் இந்த ஊசியை போடுவதற்கே 3 மணி நேர போராட்டம் ஆகிவிட்டது. கலீம் மற்றும் சுயம்பு 2 கும்கிகள் உதவியுடன் தான் இந்த மயக்க ஊசி செலுத்தப் பட்டது.
இன்றே பிடிபடும்
ஆனால் இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், மயக்க ஊசி செலுத்திய பின்னும் கரும்பு தோட்டத்து க்குள் சின்னத்தம்பி புகுந்து விட்டான். அதனால் கரும்பு தோட்டத்து க்குள் புகுந்த சின்னத் தம்பியை பிடிக்க வனத்துறை யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஊசி போட்டாச்சு.. எப்படியும் மயங்கி விழுவான்.. அதனால் வனத்துறை யினர் சின்ன தம்பியை இன்றே பிடித்து விடுவார்கள்.
4 முறை முயற்சி
மயக்க ஊசியை செலுத்த முயன்றும் வனத்துறையி னருக்கு பிடிகொடுக் காமல் 3 முறை மிஸ் ஆகிவிட்டானாம். முதல் ஊசியை டாக்டர் அசோகன் செலுத்தி உள்ளார். இரண்டாவது ஊசியை சின்ன தம்பியின் பின்னங்காலில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தங்கராஜ் பன்னீர் செல்வம் செலுத்தி உள்ளார்.
திரும்பவும் 3-வது முறையாக தங்கராஜ் செலுத்த முயன்றும் அதுவும் தவறி விட்டது. கடைசியாக சின்னதம்பி உடலில் xylazine ketamine என்கிற 8 ml மயக்க ஊசியை டாக்டர் அசோகன் சரியாக செலுத்தினார்.
வீடியோ...
Thanks for Your Comments