ஆண்டனாவில் தொங்கியபடி காகத்தை விழுங்கிய பாம்பு !

2 minute read
0


அவுஸ்திரேலியா வில் பாம்பு ஒன்று ஆன்டனாவில் தொங்கிய வாறு காகத்தை ருசி பார்த்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கிங்ஸ் கிளிப் பகுதியை சேர்ந்த கேத்தி கல் என்பவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்த காட்சியை கண்டதும், அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டார்.
காகத்தை விழுங்கிய பாம்பு
இதன் பின்னர் கேத்தி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட, அதனை ஏராள மானோர் ஷேர் செய்து வைரலாக் கினர். இது குறித்து ஏபிசி நியூஸ் நிறுவனத் திற்கு கேத்தி அளித்த பேட்டியில், பறவையை பாம்பு சாப்பிடுவதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் ஓடிசி சென்று வீடியோ எடுக்கத் தொடங்கினேன்'' என்றார்.


பேஸ்புக்கில் பதிவிட்ட கேத்தி, இது போன்ற காட்சியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டீர்கள்… எங்கள் வீட்டு ஆன்டனாவில் தொங்கிக் கொண்டு பறவையை பாம்பு ருசி பார்க்கிறது'' என்று வீடியோவு க்கு தலைப் பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் இந்த வீடியோவை ஏராள மானோர் ஷேர் செய்து அதற்கு கமென்ட் அடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பர்மாவில் பாம்பு ஒன்று தன்னை விட பெரிய மானை சாப்பிட்ட காட்சி வைரலாகியது குறிப்பிடத் தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 27, March 2025
Privacy and cookie settings