ஆஸ்திரேலியா வில் தனது விடுமுறையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய ஸ்காட்டிஷ் பெண்மணி ஒருவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மரியா பாக்ஸால் என்னும் அந்த பெண் தனது பெட்டிகளை திறந்த போது அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.
விஷமற்ற அந்த பாம்பானது, அப்பெண்னின் பெட்டியில் சுமார் 14,000 கிலோ மீட்டர் பயணித் துள்ளது. முதலில் இது தன்னை யாரோ ஒருவர் ஏமாற்று வதற்காக ரப்பர் பாம்பை வைத்ததாக நினைத்த அவர், அதை தொட்டவுடன் அசைந்ததை கண்டு திடுக்கிட்டார்.
செருப்பு பெட்டிக்குள் பதுங்கிக் கிடந்த பாம்பு, உடனடியாக வனத்துறை அதிகாரி களிடம் ஓப்படைக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறும் போது, 'பாம்பை கண்டவுடன் வந்த போனுக்கு பின்னர் நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம், பின்னர் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப் பட்டது' என்றனர்.
மீட்கப்பட்ட அந்த பாம்பு தற்போது ஈடன்பர்கில் உள்ள விலங்கு பாதுகாப்பு மையத்தில் இருக்கிறது. விமானங்களுக்குள் பாம்புகள் வருவது இது ஓன்றும் முதல் முறையில்லை;
கடந்த ஆண்டு ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவுக்கு 20 உயிருள்ள பாம்பு களை தனிநபர் ஒருவர் தனது கைப்பையில் எடுத்துச் சென்றிருந்தார். இந்த செய்திகள் இணைய தளத்தில் வைரலாகி இருந்தது.
Thanks for Your Comments