தேர்தலுக்கு முன் இறுதி வாய்ப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித் துள்ளார்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை யொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலும் வெளியிடப் பட்டது. தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர்.
அப்போது செய்தியாளர்கள் புதிய வாக்களர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர். மீண்டும் ஒரு வாய்ப்பு விரைவில் அளிக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.
சென்னையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் ஒன்றில் கலந்துக் கொண்ட மாநில தேர்தல் அதிகாரி சாஹுவிடம் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு குறித்து செய்தி யாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அந்தந்த மண்டல அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளில் இது நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments