பெர்சனல் வைஃபை நெட்வொர் க்குக்கு, 'லஷ்கர் இ தாலிபான்' எனப் பெயர் வைத்த கல்லூரி மாணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஜம்மு -காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலு க்குப் பின்னர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித் திருக்கிறது.
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ - முகமது பொறுப் பேற்றதும், இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப் படாததும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறது.
பாகிஸ்தானு க்கு அளித்திருந்த `இணக்கமான நாடு' (MFN) அந்தஸ்தைத் திரும்பப் பெற்றுள்ள இந்தியா, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள் களுக்கான சுங்கவரியை 200 சதவிகிதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல, ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகிலுள்ள கல்யாண் பகுதியில், வைஃபை இணைப்பைத் தேடிய குடியிருப்பு வாசிகளுக்கு 'லஷ்கர் - இ - தாலிபான்' என்ற பெயரில் நெட்வொர்க் ஒன்று தென்படவே, அதிர்ச்சி யடைந்தனர்.
கடக்படா பகுதியில் உள்ள அம்ருத் ஹெவன்லி சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருக் கிறது. இதுகுறித்துப் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த விநாயக், `வைஃபை நெட்வொர்க்கில் லஷ்கர் - இ - தாலிபான் என்ற பெயர் தோன்றியதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி யடைந்து விட்டோம்.
உடனடியாக புகைப்பட ஆதாரத்துடன் போலீஸில் இதுகுறித்து புகார் தெரிவித்தோம்’ என்றார். இதை யடுத்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் வைஃபை நெட்வொர் க்குக்கு அவ்வாறு பெயர் சூட்டப் பட்டிருப்பதைக் கண்டு பிடித்தனர்.
அந்தக் குடியிருப்பில், கல்லூரியில் படித்துவரும் மாணவர் ஒருவர், தனது தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், `வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக விளை யாட்டாக வைஃபை நெட்வொர் க்குக்கு அந்தப் பெயரைச் சூட்டியதாக, அந்தக் கல்லூரி மாணவர் ஒப்புக் கொண்டார்.
இது போன்ற பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என கண்டித்ததைத் தொடர்ந்து, உடனடியாக அவர் வைஃபை நெட்வொர் க்கின் பெயரை மாற்றி விட்டார்’ என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Thanks for Your Comments