புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்களை கொன்ற ஜெய்ஷ்- இ- முகமது இயக்க பயங்கர வாதிகள் வேட்டை யாடப்பட்டு வருகிறார்கள். தாக்குதல் நடத்தியது 10 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் என்பதை கண்டு பிடித்த பாதுகாப்பு படையினர் அவர்களில் யாரையும் தப்ப விடக்கூடாது என ஆக்ரோசமாக கடந்த 2 நாட்களாக பயங்கர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
நேற்று இரவு பாதுகாப்பு படையி னருக்கு நல்ல செய்தி கிடைத்தது. புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கர வாதிகளில் சிலர் பீங்லான் கிராமத்து க்குள் பதுங்கி இருப்பதாக ரகசிய செய்தி வந்தது. இதை யடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று வேட்டை யாடினார்கள்.
ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கர வாதிகளில் 2 பேரை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார் என்பதை முதலில் பாதுகாப்பு படையினரால் உறுதிப் படுத்த இயல வில்லை. என்றாலும் சுட்டுக் கொல்லப் பட்ட 2 பயங்கர வாதிகளும் கம்ரன் மற்றும் ஹிலால் என்று தகவல்கள் வெளியானது.
இதில் கம்ரன் என்பவன்தான் புல்வாமா தாக்குதலு க்கு மூளையாக செயல் பட்டவன் ஆவான். பயங்கரவாதி கம்ரன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். அங்கு ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்தி நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் உயிர் பறிபோக காரணமாக இருந்த கொடூரன் ஆவான்.
பாகிஸ்தானில் ஜெய்ஷ்- இ- முகமது இயக்கத்தை ஆரம்பித்த மசூத் அசாருக்கு இவனை பற்றி தெரிய வந்தது. அசாரின் அழைப்பின் பேரில் கம்ரன் பாகிஸ்தா னுக்கு வந்து வெடி குண்டுகள் தயாரித்து கொடுத்து வந்தான். இவனை பயன்படுத்தி மசூத் அசார் காஷ்மீரில் பல தடவை கைவரிசை காட்டி உள்ளான்.
நாளடைவில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க முதன்மை கமாண்டர்களில் ஒருவனாக இந்த கம்ரன் உயர்ந்தான். மசூத் அசாரின் வலதுகரம் போல இயங்கி வந்தான். மசூத் அசாரின் உறவினர் உஸ்மான் என்பவன் சில மாதங்க ளுக்கு முன்பு பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப் பட்டான்.
அதற்கு பழிவாங்கும் வகையிலேயே ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த கம்ரனை கடந்த டிசம்பர் மாதம் 9-ந்தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பூஞ்ச் செக்டார் வழியாக காஷ்மீரு க்குள் மசூத் அசார் அனுப்பி இருந்தான்.
கம்ரனுக்கு அப்துல் ரசீத் காஜி என்ற பெயரும் உண்டு. ஆப்கானிஸ்தான் போரில் கலந்து கொண்ட இவன், வெடிகுண்டு களை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவன். எனவே தான், அவனை மசூத் அசார் இந்த தாக்குதலுக் காக தேர்வு செய்து அனுப்பி இருந்தான்.
அவன் ஊடுருவிய தகவல் ஏற்கனவே பாதுகாப்பு படையினருக்கு தெரிய வந்தது. அவனை தேடி வந்தனர். ஆனாலும், எங்கோ ரகசியமாக பதுங்கி இருந்து தாக்குதலுக் கான திட்டங்களை அவன் தயாரித்து இருக்கிறான்.
கடந்த வியாழக் கிழமை புல்வாமாவில் தாக்குதல் நடத்துவ தற்கு ஒரு நாளுக்கு முன்பு இவனை பாதுகாப்பு படையினர் நெருங்கி னார்கள். அவனை சுற்றி வளைத்து கொல்லும் முயற்சி நடந்தது. ஆனால் அதற்குள் அவன் தப்பி சென்று விட்டான். மறுநாள் அவன் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி திட்ட மிட்டப்படி தனது கைவரிசையை காட்டி விட்டான்.
40 வீரர்களை கொன்ற பிறகு அவன் பாகிஸ்தானில் இருக்கும் மசூத் அசாருக்கு தகவல் அனுப்பி இருந்தான். உளவுத் துறையால் கண்டு பிடிக்க முடியாத நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவன் தகவல் பரிமாற்றம் செய்து இருப்பது இதன் மூலம் தெரிய வந்தது.
அவன் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தப்பி சென்று இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் கம்ரன் புல்வாமா மாவட்டத்து க்குள் தான் இருக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். அதன் அடிப்படை யில் தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
சில உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அவன் இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக கண்டு பிடித்தனர். இன்று காலை அவன் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். ஆனால் சுட்டுக் கொல்லப் பட்டது அவன் தானா? என்பதை இன்று மதியம் வரை பாதுகாப்பு படையினர் உறுதிப் படுத்த வில்லை.
இதற்கிடையே புல்வாமா தாக்குதல் பற்றிய வெடிகுண்டு ஆய்வு அறிக்கை இன்று மத்திய உள்துறை யிடம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில் தாக்குதலு க்கு 75 முதல் 135 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் பயன் படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது.
மேலும் வெடிகுண்டு காரை மோத செய்யாமல் கருவி மூலம் இயக்கி குண்டுகளை வெடிக்க செய்து இருப்ப தாகவும் அந்த அறிக் கையில் கூறப் பட்டுள்ளது.
Thanks for Your Comments