காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை படையினரால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பரிதாபமாக பலியான ராணுவ வீரார்களின் கடைசி நிமிடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி யுள்ளன.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்த துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தி யிக்கும் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களுடைய ஆழ்ந்த வருத்தங் களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மரணமடைந்த வீரர்களின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி யுள்ளன.
நிதின் ரதோர்:
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்தால் நிதின் ரதோர் என்பவர், தாக்குதல் நிகழ்த்தப் படுவதற்கு சில நிமிடங் களுக்கு முன்பு தான் தன்னுடைய மனைவிக்கு பேருந்தின் முன்பு நின்றவாறு ஒரு செல்பி எடுத்து அனுப்பி யிருக்கிறார்.
இது குறித்து அவரது நண்பர் கவ்ரவ், ரதோர் நண்பர் விடுமுறை யில் வந்து விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பணிக்கு திரும்பி யிருந்தார். அவருக்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும்.
அடிக்கடி அங்கிருந்து இயற்கையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பார். 15 ஆண்டு களாக பணிபுரிந்து வந்த ரதோருக்கு 8 மற்றும் 10 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர் என தெரிவித் துள்ளார்.
சஞ்சய் ராஜ்புத்:
புல்தானா மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் ராஜ்புத் (45) என்ற வீரர் கடந்த 20 ஆண்டுகளாக நாக்பூர் சிஆர்பிஎப் மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான், காஷ்மீருக்கு பணி மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப் படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தான், தன்னுடைய மனைவிக்கு போன் செய்து மகளின் உடல்நிலை குறித்து விசாரித் துள்ளார்.
வசந்த குமார்:
கேரளா மாநிலத்தை சேர்ந்த வசந்தகுமார் (40), கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இவர் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே பாக்கி உள்ளது.
விடுமுறைக் காக வீட்டிற்க்கு வந்த வசந்தகுமார், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பணிக்கு சென்றி ருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
Thanks for Your Comments