ஜப்பானில் அதிசய வகையான மீன் ஒன்று பிடிப்பட்டுள்ளது. ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பத்தை அறிவிக்கும் மீன்களாக நம்பப் படுவது ஓர்மீன். ஜப்பானின் ஒக்கினாவா என்னும் இடத்தில் இந்த ஓர்மீன் பிடிப்பட்டுள்ளது.
இரண்டு சில்வர் நிறத்தில் உள்ள இந்த ஓர் மீன்கள் 13 அடி நீளத்தில் உள்ளது. ‘இந்த மீன்களை குறித்து செய்திகளைத் தான் கேள்விப் பட்டுள்ளேன். இப்போது தான் இந்த மீன்களை நேரில் பார்க்கிறேன்' என ஒரு ஜப்பானியர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு மட்டும் ஜப்பானில் 12 அரிய வகை ஓர் மீன்கள் கரை யொதிங்கின. பசிபிக் மற்றும் இந்தியன் கடல்களில் 200 முதல் 1000 மீட்டர் ஆழத்தில் வாழ்வது இந்த ஓர் மீன்கள்.
சுனாமியோ பூகம்பமோ வரும் முன் ஏற்படும் எலக்ட்ரோமாக் நேட்டிக் அலைகதிர்க ளால் இந்த அரியவகை மீன்கள் உணர்ந்து, கடல்களின் ஆழத்தில் சென்று விடும் என ஜப்பானில் நம்பப் படுகிறது.
ஜப்பானிய கடலில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போது சுமார் 18,500 ஓர்மீன்கள் காணாமல் போனது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments