சாலையை தோண்டவே தேவை யில்லை.. அதற்கு பதிலாக முதல் முறையாக, நவீன முறையில் கொளத்தூர் உட்பட சென்னை முழுவதும் புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப் பட்டுள்ள தாக அமைச்சர் தங்கமணி தெரிவித் துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மு.க.ஸ்டாலின், "சென்னையில் உயர் மற்றும் தாழ்வழுத்த மின் கேபிள்களை புதைவடக் கம்பிகளாக மாற்ற ரூ.2,051 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப் பட்டிருப்பதாக கூறியும், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் புதைவட கம்பிகளாக மாற்றும் பணி 10 சதவீதம் கூட முடிக்கப்பட வில்லை" என்றார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சரும், சாலைகளில் பள்ளங்களை தோண்டாமல் துளையிட்டு கேபிள்களை பதிக்க ஆய்வு செய்து வருவதாக கூறி யிருந்தார்.
கேபிள்கள்
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றைய சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது இதே பிரச்சனையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுப்பினார். அப்போது, "கொளத்தூர் தொகுதியில் புதைவட மின் கேபிள்கள் போட வேண்டும் என பல முறை சபையில் தெரிவித்து விட்டேன்.
புதைவடம் அமைக்கும் பணி
ஆனால் எந்த பணிகளும் நடக்க வில்லை. நான் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு துறைகளை ஒருங்கிணை க்கும் குழு ஒன்றினை அமைத்து அதன் ஆலோசனை களையும் பெற்று மாநகராட்சி பணிகளை விரைந்து முடித்தோம்.
அது போன்று ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்து கொளத்தூர் பகுதியில் புதை வடம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க அமைச்சர் ஏற்பாடு செய்வாரா? என கேள்வி எழுப்பினார்.
நிறைய பிரச்சனைகள்
இதற்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து பேசும் போது, "உண்மை யிலேயே சாலைகளை தோண்டி மின் கம்பி புதை வடங்களை புதைக்கும் போது நிறைய பிரச்சனைகள் வருகின்றன. ஒரு இடத்தில் தோண்டினால் தொலைபேசி கம்பி கொஞ்சம் பாதிக்கப் பட்டதற்கே ரூ.60 லட்சம் நஷ்டஈடு கேட்டார்கள்.
உயர்மின் கோபுரங்கள்
அதனால் சாலையை தோண்டாமல் நவீன முறையில் முதன் முறையாக கொளத்தூர் உட்பட சென்னை முழுவதும் புதைவிட கம்பி அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பணி முடிந்து விடும்.
அதே போல, தமிழகம் முழுவதும் 6,411 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன, தேவைப்படும் இடங்களில் கூடுதல் கோபுரங்கள் அமைக்கப் படும்" என்றார்.
Thanks for Your Comments