பித்தப்பையை நீக்கினால் உணவு சரியாகச் செரிமானம் ஆகாதா?

0
பித்தப் பையை நீக் கிவிட்டால் பித்தநீர் சுரக்காது. பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது" என்று பல பேர் தவறாக நினைத்துப் பித்தப் பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். உண்மை என்ன வென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது.
பித்தப்பையை நீக்குவது


அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன் சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப் பையில் தங்கிச் செல்கிறது, அவ்வளவு தான். பித்தப் பையை நீக்கியவர் களுக்குப் பித்த நீரானது நேரடியாக முன் சிறுகுடலுக்கு வந்து சேர்ந்து விடும்.
பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன?
இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பித்த நீருக்குக் கல்லீரல் என்பது பிறந்த வீடு. பித்தப்பை என்பது விருந்தினர் வீடு. விருந்தினர் வீடு இல்லா விட்டாலும், இனிதாக வாழ முடியும் அல்லவா? அது மாதிரி தான்.

பித்தப்பை இல்லா விட்டாலும் ஆரோக்கிய மாக வாழலாம். என்ன…. ஒரே ஒரு நிபந்தனை. இந்த அறுவை சிகிச்சை க்குப் பிறகு கொழுப்புள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings