எல் நினோ (El -nino ) என்றால் என்ன?

0
உலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல் களுக்கும் பேரழிவு களுக்கும் காரணா மாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இந்த பெயரை நம்மில் நிறையே பேர் கேள்விப்பட்டு இருக்கிறோம். 
El -nino
எதிர் பார்க்காத சமயத்தில் திடீர் என இயற்கை பேரழிவுகள் எங்காவது ஏற்படும் பொழுது எல் நினோ என்ற பெயர் அடிபடுவதை கண்டிப்பாக நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் பொழுதும் இந்த பெயர் ஊடகங் களில் பலமுறை உச்சரிக்கப் பட்டது.


எல் நினோ (El -nino ) என்றால் என்ன ?

எல் நீனோ (El -nino ) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது. அதாவது குறிப்பிட்ட காலங்களு க்கு ஒரு முறை பசிபிக் கடல் பரப்பின் வெப்ப நிலையானது சராசரி வெப்பநிலையினை விட அதிகமான தாக இருக்கும்.அந்த பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வை தான் எல் நினோ என்று சொல்கி றார்கள்.

எல் நினோ (El -nino ) என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?

எஸ்பானிய மொழியில் எல் நினோ என்ற சொல் குழந்தை இயேசுவை குறிக்கும் வகையில் சிறுவன் என்ற பொருளை வெளிப் படுத்துகிறது. 
எல் நினோ
தென் அமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் இயேசு பிறந்த நாள் விழாவான கிருஸ்துமஸ் விழா கொண்டாடப் படும் காலங்களில் இந்த வெப்பநிலை உயர்வு ஏற்படுவதால் இதனை எல் நீனோ என்று அழைக்கி றார்கள்.

லா நினா (La-nina ) என்றால் என்ன ?

பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் எல் நினோவுக்கு எதிரான மாற்றங் களைத் தான் லா-நினோ என்கிறோம். அதாவதும் பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்ப நிலை குறைவைத் தான் லா - நினா என்கிறோம். எஸ்பானிய மொழியில் லா-நினோ என்பது சிறுமி என்ற சொல்லை குறிக்கிறது.


சரி இந்த எல்-நினோ மற்றும் லா-நினாவால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து ?

இந்தியாவை பொருத்த வரை எல் -நினோ தென்மேற்கு பருவ மழையின் போக்கை மாற்றி அமைத்து விடும் அதே சமயம் லா -நினோ வால் சரியான நேரத்தில் சரியான அளவில் மழை பெய்யக் கூடும். இது இந்தியாவை பொறுத்த வரையில் மட்டும் தான். லா - நினாவால் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் பல உண்டு.

இந்த எல்-நினோ பசிபிக் கடல் பகுதிகளில் எப்பொழுதில் இருந்து ஏற்பட ஆரம்பித்தது ?
பசிபிக் கடல் பகுதி
இது வரையில் உறுதியாக தெரியவில்லை ஆனால் சுமார் 10,000 ஆண்டு களுக்கு முன் பிலிருந்தே சில ஆண்டு களுக்கு ஒரு முறை இந்த எல்-நினோ ஏற்பட்டு இருப்பதாக கூறப்படு கிறது. யாருக்கு தெரியும் நமது குமரிக் கண்டம் கடலில் மூழ்கிய நிகழ்வுக்கும் கூட இந்த எல் நினோ காரணமாக இருக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings