மருத்துவர் களின் அலட்சியம் காரணமாக மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. ஐதிராபாதில் உள்ள நிஜாம் மருத்துவ மனையில் 33 வயது பெண் ஒருவருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது அவரின் வயற்றில் கத்திரிக்கோள் அலட்சியமாக வைக்கப் பட்டது.
வயற்றிலேயே சுமார் மூன்ற மாதங்களாக அந்த கத்திரிக்கோள் இருந்தது தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் வயற்றுவலி தொடர்ந்த தால் மருத்துவ மனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்ததில் கத்தரிக்கோள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டதால் அதை எடுக்க இன்று காலை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை இன்று காலை நடத்தப் பட்டது.
‘எங்களுக்கு நோயாளிகளே முக்கியதுவம், அந்த கருவியை அகற்றி பாதிக்கப் பட்டவரின் உடல் நலத்தை சரிசெய்வதே முக்கியம்' என அந்த மருத்துவ மனையின் இயக்குனர் கே. மனோகர் NDTV யிடம் கூறினார். மேலும் அவர் இந்த அசம்பாவித த்தை பற்றி விசாரணை செய்யப் போவதாக தெரிவித்தார்.
Thanks for Your Comments