கையிலும் விரல்களிலும் பொதுவாக உண்டாகும் வலி, உணர்ச்சியின்மை மற்றும் கூச்ச உணர்வே மணிக்கட்டு எலும்புக் குழாய் நோய் என்று அழைக்கப் படுகிறது. இவ் உணர்வுகள் படிப்படியாகத் தொடங்கி இரவில் மோசமாகும்.
பெருவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலின் பகுதியையும் இது பாதிக்கக் கூடும். இது மணிக் கட்டில் உள்ள நடு நரம்பில் உண்டாகும் அழுத்தத் தால் பொதுவாக ஏற்படுகிறது. நோயறிகுறிகள்
இதன் மூன்று முக்கிய அறிகுறிகள் வருமாறு:
கூச்சம்
உணர்ச்சி யின்மை
வலி
இவ் அறிகுறிகள் பெருவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலின் ஒரு பகுதியிலும் காணப்படும்.
ஊசியால் குத்துவது போன்ற எரிச்சலும் குத்தலும்
கையில் தோல் உலர்தல், வீக்கம் மற்றும் நிற மாற்றம்
பெருவிரலை மடக்கும் போது பலவீனம்
பெருவிரல் தசைச் சுருக்கம்
காரணங்கள்
மணிக்கட்டு நடு நரம்பில் ஏற்படும் அழுத்தத் தால் மணிக்கட்டு எலும்புக் குழாய் நோயின் அறிகுறிகள் தென்படு கின்றன.
ஆபத்துக் காரணிகள்
குடும்ப வரலாறு: குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் இருந்திருந் தால் பிறருக்கும் வரும் வாய்ப்புண்டு. நீரிழிவு, தைராயிடு சுரப்பிக் கோளாறு போன்றவற்றாலும் வரலாம்
மணிக்கட்டுக் காயங்கள்
சுளுக்கு, முறிவு, நசுக்கப் படுவதால் காயம் ஆகியவை மணிக்கட்டு நடு நரம்பில் வீக்கத்தையும் அழுத்த த்தையும் ஏற்படுத்தும்.
நோய் கண்டறிதல்
உடல் சோதனைகள்: நோய் இருக்குமானால் சிறிது நேரம் மணிக்கட்டை வளைத்தாலோ தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடித்தாலோ கைகளில் வலி, உணர்ச்சி யின்மை, கூச்சம் ஆகியவை ஏற்படும்.
மின்னலைச் சோதனை: நரம்பைத் தூண்டுவதன் மூலம் நரம்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைக் கண்டறிய லாம். நோய் மேலாண்மை
மின்னலைச் சோதனை: நரம்பைத் தூண்டுவதன் மூலம் நரம்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைக் கண்டறிய லாம். நோய் மேலாண்மை
மணிக்கட்டு காப்புறை
மணிக்கட்டு வளையும் போது நடு நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நோயறிகுறிகள் தீவிரமடையும்.
பொதுவாக இரவில் மணிக்கட்டு காப்புறை அணியும் போது மணிக்கட்டு வளைவதைத் தடுத்து அதை ஒரே நிலையில் வைக்க உதவும்.
பொதுவாக இரவில் மணிக்கட்டு காப்புறை அணியும் போது மணிக்கட்டு வளைவதைத் தடுத்து அதை ஒரே நிலையில் வைக்க உதவும்.
கோர்ட்டிகோஸ்டிராய்ட்ஸ்
ஊக்க மருந்துகள் உடலின் நோய் க்காப்புத் திறனை அதிகரிக்கும். அவை உருவாக்கும் வேதிப் பொருட்கள் அழற்சியைக் குறைக்க உதவும்.
அறுவை மருத்துவம்
மணிக்கட்டு எலும்புக் குழாய் அழுத்த நீக்க மருத்துவம் என அழைக்கப் படுகிறது. பொதுவாக ஆறு மாதத்திற்கு மேல் இந்நிலை நீடித்தால் இம்மருத்துவம் செய்யப் படுகிறது.
மணிக்கட்டு எலும்புக் குழாயின் மேற்பகுதி வெட்டப்பட்டு நடு நரம்பின் மேல் உள்ள அழுத்தம் குறைக்கப் படுகிறது.
மணிக்கட்டு எலும்புக் குழாயின் மேற்பகுதி வெட்டப்பட்டு நடு நரம்பின் மேல் உள்ள அழுத்தம் குறைக்கப் படுகிறது.
தடுப்பு முறை
கையிலும் மணிக் கட்டிலும் அழுத்தம் சீராக இருக்கும்படி அவற்றின் அசைவுகளை வைத்துக் கொள்ளவும். புயம், கை, விரல் தசைகளை வலிமை யாகவும் வளையும் தன்மை கொண்ட தாகவும் வைத்துக் கொள்ளவும்.
நீட்சிப் பயிற்சிகளைச் செய்யவும்
அடிக்கடி ஓய்வும், மணிக்கட்டை நேராக வைக்க உதவும் காப்புறை அணிதலும், சரியாக மணிக்கட்டை வைத்துக் கொள்ளு தலும் முக்கியம்.
முதலாளிகள் தங்கள் தொழிலாளர் களுக்கு ஏற்ற பணிச் சூழலியலை அமைத்துத் தர வேண்டும்
முதலாளிகள் தங்கள் தொழிலாளர் களுக்கு ஏற்ற பணிச் சூழலியலை அமைத்துத் தர வேண்டும்