உலகின் வயதான 116 வயது ஜப்பான் மூதாட்டி தேர்வு !

0
உலகின் வயதான நபராக ஜப்பானை சேர்ந்த 116 வயது மூதாட்டி கேன் டனாகா தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவர் இன்னமும் கணக்கு பாடங்களை படித்துக் கொண்டு, செஸ், கேரம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக் கிறார். கேன் டனாகா குறித்த அறிவிப்பை கின்னர் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் இன்று அறிவித்துள்ளது. 
உலகின் வயதான 116 வயது ஜப்பான் மூதாட்டி தேர்வு !


ஜப்பானை சேர்ந்த கேன் டனாகா கடந்த 1903 ஜனவரி 2-ம்தேதி பிறந்தார். அந்த ஆண்டில் தான் ரைட் சகோதரர்க ளால் விமானம் பறக்க விடப்பட்டது. மேற்கு ஜப்பானின் புகுவோகா பகுதியில் டனாகா வசித்து வருகிறார். கடந்த 1922-ல் அவருக்கு ஹிடியோ என்பவருடன் திருமணம் முடிந்தது. 

இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன. 5-வதாக ஒரு குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். ஜப்பானில் தான் அதிக வயது வரை வாழ்வோர் அதிகம் உள்ளனர். இங்கு முதியோர் இல்லமும் அதிகளவு இருக்கின்றன. 

முன்னதாக அதிக வயது வரை இருந்த ஜிரோமன் கிமுரா அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் என்ற பட்டத்தை வைத்திருந்தார். கடந்த ஜூன் 2013-ல் அவருக்கு 116 வயதான போது உயிரிழந்தார். அதற்கு முன்பாக 1997-ம் ஆண்டில் 122 வயதான ஜீன் லூயிஸ் என்பவர் 122 -வது வயதில் உயிரிழந்தார். அவர் பிரான்சை சேர்ந்தவர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings