ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதி களுக்கும், பாதுகாப்பு படையினரு க்கும் இடையே இன்று காலை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். புல்வாமாவின் ட்ராலில் இரண்டு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி யிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிக்கப் பட்டது. பின்னர் தீவிரவாதிகள் பதுங்கி யிருந்த அந்த வீடு சுற்றி வளைக்கப் பட்டு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்.14 -ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலு க்கு பாகிஸ்தானை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றது.
இதைத் தொடர்ந்து இந்திய விமானப் படைகள் பாகிஸ்தான் எல்லைக் கோட்டு பகுதியில் புகுந்து பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மிகப்பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை முற்றிலும் அளித்தது.
இதன்பின், கடந்த பிப்.20ஆம் தேதி புல்வாமா வில் நடந்த தாக்குதலில், ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரி ழந்தனர். புல்வாமா தாக்குதலு க்கு மூலக்காரண மாக செயல்பட்ட ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பின் இந்திய தலைவன் 12மணி நேரம் நடந்த தொடர் தாக்குத லில் சுட்டுக் கொல்லப் பட்டான்.
Thanks for Your Comments