வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங் களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11-ம்தேதி சட்ட சபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் கிராமப் புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்கள், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங் களையும் சேர்த்து மொத்தம் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடை வார்கள். ரூ.2 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப் படுகிறது.
திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக பெரம்பலூரை சேர்ந்த மனிஷா என்கிற திருநங்கை உள்பட 32 குடும்பங் களுக்கு சிறப்பு நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Thanks for Your Comments