அபிநந்தன் மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை !

0
இந்திய விமானப் படையின் விங் கமாண்டர், அபிநந்தன் வர்தமனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள தாக அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் அபிநந்தனை பாராஷூட் மூலம் தரை யிறங்கிய பின்னர், அங்கிருந்த உள்ளூர் வாசிகள், அவரை சரமாரி யாக தாக்கினர். 
அபிநந்தன் மருத்துவ பரிசோதனை


அதில் தான் இந்த காயம் ஏற்பட்டி ருக்கும் என்று தெரிகிறது. அதே போல, முதுகுத் தண்டுப் பகுதியின் அடியிலும் அவருக்கு காயம் ஏற்பட்டி ருப்பதாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அபிநந்தனின் விமானம் சுடப் பட்டதைத் தொடர்ந்து, பாராஷூட் மூலம் தப்பிக்க முயன்றார். 

அப்போது தான், முதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு காயம் ஏற்பட்டி ருக்கும் என்று கூறப்படு கிறது. இந்த மருத்துவ பரிசோதனை யானது, அபிநந்தன் உடலில் எதாவது உள் காயம் உள்ளதா என்பதையும், உளவு பார்க்க சாதனங்கள் எதாவது பொருத்தப் பட்டுள்ளதா என்பதை யும் உறுதி செய்வதற் காக நடத்தப் பட்டதாக தகவல் தெரிவிக்கப் படுகிறது. 

டெல்லியில் இருக்கும் ரெஃபரல் மருத்துவ மனையில் இந்த பரிசோதனை நடந்துள்ள தாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த முதற்கட்ட பரிசோதனை களைத் தொடர்ந்து அடுத்து வரும் 10 நாட்களுக்கு, அபிநந்தன் பல்வேறு சோதனை களுக்கு உட்படுத்தப் படுவார் எனப்படு கிறது.

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப் படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப் பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரை யிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. 


அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதை யடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியா விடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான். கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. 

அதில் தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். இதை யடுத்து பாகிஸ்தான் தேசிய சட்ட மன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலை நாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக் கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings