திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட இளைஞரின் உடல் ஆந்திர மாநிலம் கர்ணூலில் கண்டெடுக் கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். காக்களூர் தொழிற் பேட்டையில் உள்ள தனியார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வந்தார்.
புதன்கிழமை இரவு பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் சுதாகர் வீடு திரும்பிக் கொண் டிருந்தார்.
அவர் அத்திப்பட்டு நோக்கி திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் பாண்டூர் அருகே சென்ற போது ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிரே திருப்பதி யிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்த சுதாகர் தூக்கி வீசப்பட, ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் பார்த்த போது விபத்து நடந்த இடத்தில் அவரது பைக் மற்றும் ஹெல்மெட் ஒருபுறம் என சாலையில் சிதறி கிடந்தது.
சுதாகரின் ஒரு கால் மட்டும் அங்கு துண்டாகி கிடந்த நிலையில் அவரின் உடலை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ள முள்புதர்களில் தேடிப் பார்த்த போதும் கிடைக்க வில்லை.
ஒரு வேளை யாராவது அவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருவள்ளூரில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மருத்துவ மனைகளில் தேடியும் அவர் எங்கும் சிகிச்சையில் இல்லை என்பது தெரிய வந்தது.
விபத்தில் சிக்கிய சுதாகர் என்ன ஆனார் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவரமும் தெரிய வில்லை.
வியாழக்கிழமை காலை போலீசாரிடம் விபத்து ஏற்படுத்திய கார் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சுதாகரின் உடல் குறித்த
எந்த தகவலும் கிடைக்காததால் பாண்டூர் கிராம மக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டா 50 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். இதை யடுத்து சுதாகரின் உடலை தேடும் பணியில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் தீவிரம் காட்டினர்.
சி சி டிவி கேமரா மூலம் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்களின் பதிவெண்களை வைத்து தேடிய போதும் துப்பு துலங்க வில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடப்பா அருகே சிமெண்ட் ஏற்ற சென்ற காலியான லாரி ஒன்றில் கால் துண்டான நிலையில்
சுதாகரின் சடலம் கண்டெடுக்கப் பட்டதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பொன்னிக்கு தகவல் வந்தது.
அதாவது சம்பவம் நடந்த போது சுதாகரின் உடலானது கால் துண்டான நிலையில் பின் பக்கம் வந்த லாரிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதாலும், இந்த விபத்தில் லாரிக்கு தொடர் பில்லாததாலும் லாரி ஓட்டுனர் தனது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்ணூலில் உள்ள சிமெண்ட் தொழிற் சாலைக்குள் செல்வதற்கு முன்பாக லாரியை சோதனை செய்த போது லாரிக்குள் இளைஞர் சடலம் இருக்கும் தகவல் ஓட்டுனருக்கு தெரிய வந்துள்ளது.
அவர் நேரில் பார்த்த விபத்து குறித்து அங்குள்ள காவல் துறையினரிடம் விவரித்துள்ளார்.
இதை யடுத்து ஆந்திர காவல் துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய சடலம் லாரியில் விழுந்த தகவலை விளக்கி உள்ளனர்.
இதை யடுத்து சுதாகரின் உடலை திருவள்ளூர் கொண்டு வருவதற்காக தமிழக காவல் துறையினர் ஆந்திராவிற்கு விரைந் துள்ளனர்.
திருவள்ளூர் கொண்டு வரப்படும் சுதாகரின் சடலம் பிணகூறாய்வு க்கு பின்னர் உறவினர் களிடம் ஒப்படைக் கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப் பட்டுள்ளார்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் தங்களால் கட்டுப் படுத்தும் வேகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்,
முன்னெச்சரிக்கை இன்றி கனரக வாகனங்களை அதிவேகத்தில் முந்தி செல்ல அவசரம் காட்டினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.
வீடியோ..
Thanks for Your Comments