முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணம் நேற்று வெகு விமர்சை யாக நடந்தது. முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா மேக்தா திருமணம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்தத் திருமண த்திற்கு திரையுலக பிரபலங்கள், தொழில் பிரபலங்கள், முக்கியத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முக்கியமாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன் மனைவியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். உலகத் தலைவர்க ளான இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளைர், ஐ நா சபையின் முன்னாள் செக்கரட்ரி ஜெனரல் பன் கி மூன் ஆகியோரும் பங்கேற்றனர்.
சுந்தர் பிச்சையைத் தவிர டாடா, நாராயண மூர்த்தி என பிசினஸ் ஜாம்பவன்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் உலகின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.
அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாருக் கான், ரன்பீர் கபூர், அலியா பட், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்கள் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ் நாட்டிலிருந்து ரஜினிகாந்த் இந்தத் திருமணத்தில் பங்கேற்றார். ரஜினியுடன் அவரது இளைய மகளான சவுந்தர்யா கலந்து கொண்டார். ஒரு பெரிய திருவிழா போன்றே இந்தத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
Thanks for Your Comments