மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜய காந்துடன், ஓ.பி.எஸ். மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக -வை இழுப்பதில் திமுகவும், அதிமுக -வும் அக்கறை காட்டி வருகிறது.
இருப்பினும், அதிமுக தரப்பில் இருந்து தான் அதிக முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப் படுகின்றன. இருப்பினும், விஜய காந்த் தரப்பில் பிடி கொடுக்காமல் 7 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அதிமுக அளிப்பதில் தயக்கம் காட்டி வருவதால் இழுபறி நீடிக்கிறது.
இது குறித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டி யளித்த அதிமுக அமைச்சர்கள், தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை யில்லை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சென்று இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது- விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரித்தோம். எங்களிடம் மகிழ்ச்சி யாகவும், சுறு சுறுப்பாகவும் பேசினார். ஏற்கனவே தேமுதிக -வுடன் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக் கிறோம். இன்றோ அல்லது நாளையோ உடன்பாடு ஏற்பட்டு விடும்.
6 -ம் தேதிக்குள் கூட்டணி பற்றி அனைத்துக் கட்சிகளின் முடிவுகளும் நல்ல முறையில் முடிவு செய்யப்படும். அன்றைய தினம் மோடி பங்கேற்கும் மாநாட்டில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர் களும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments