ஹெச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் மூலம் எய்ட்ஸ் வைரஸ் அகற்றப் பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர். கிட்டத்தட்ட 3 ஆண்டு களுக்குப் பின் ஹெச்.ஐ.வி நோய்த் தாக்கத்தை எதிர்க்கும்
அரிய மரபணு மாற்றத்தைக் கொண் டிருக்கும் எலும்பு மஜ்ஜை தண்டு செல்களை பெற்று பாதிக்கப் பட்டவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் ஹெச்.ஐ.வி நோய்க்கான எந்த தடயமும் தற்போது இல்லை.
பேராசிரியர் மற்றும் ஹெச்.ஐ.வி உயிரியலாளர் ரவீந்திர குப்தா, “ மாற்று அறுவை சிகிச்சை க்குப் பின் ஹெச்.ஐ.வி இருந்தத் தற்கான சுவடே இல்லை யென்று என்று தெரிவித்தார். “ஆராய்ச்சி யாளர்கள் இனி தன்னுடைய ஆய்வின் மூல எய்ட்ஸ்க்கு முடிவு கட்ட முடியும் என்பதை இந்த ஆய்வு முடிவு காட்டுவ தாக தெரிவிக்கிறார்”.
ஆனால் ஹெச்.ஐ.வியை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்காக முற்றிலுமாக குணமாகி விட்டதாக கூற முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். ‘செயல்பாட்டு ரீதியாக' குணமாகி விட்டாலும், எச்சரிக்கை யுடன் கண்காணிக் கப்படும் என்றும் தெரிவித் துள்ளார்.
உலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப் பட்டுள்ளன.1980 களில் தொடங்கி யத்திலிருந்து எய்ட்ஸ் தொற்று நோய் 35 மில்லியன் மக்களைக் கொன்றது. இந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி யில் சமீபத்திய ஆண்டுகளில் போதை மருந்து சேர்க்கைக்கு வழி வகுத்தது.
ஆராய்ச்சி யாளருடன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட நேர் காணலில், “ 2016 ல் புற்று நோயால் பாதிக்கப் பட்டவருக்கு உயிர் வாழ கடைசி வாய்ப்பாக இருந்ததாக தெரிவித்தார்”. நாங்கள் ஹெச்.ஐ.வியை குணப்படுத்த வில்லை மாறாக எங்களுக்கு சாத்தியப்பட்ட வகையில் வைரஸ்ஸை நீக்கி யுள்ளோம்” என்று கூறுகிறார்.
இந்த ஆய்வு அறிக்கை சியாட்டல் மாகாணத்தில் நடந்த மருத்துவ ஆய்வில் வழங்கப் பட்டது. ஆய்வுக் குழு நோயாளின் பெயர், வயது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் பிற தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டது.
Thanks for Your Comments