கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்தவர் சபரி என்கிற ரிஷ்வந்த் (வயது 25). சிவில் என்ஜினீயர். இவர் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். நாளடைவில் தொலை பேசியில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம் பட்டியில் காத்திருக்கு மாறு சபரி தெரிவித் துள்ளார். ஊஞ்சவேலாம் பட்டிக்கு தனது நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28) திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் சென்ற சபரி காரில் மாணவியை தாராபுரம் சாலையில் அழைத்து சென்று செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படு கிறது.
அந்த புகைப்படத்தை காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளனர். மேலும் மாணவியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்து கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படு கிறது.
மாணவி கூச்சலிடவே தாராபுரம் சாலையில் பெரியாக் கவுண்டனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பிய வரை திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வந்துள்ளனர். இதை யடுத்து மாணவி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 25-ந் தேதி காலை சபரி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1., நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப் பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தர விட்டார். ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளி யாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப் பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசு வுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இன்று ஜாமின் மனு விசாரணை க்கு வந்தது. அப்போது, அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றச் சாட்டுகளின் தன்மையின் அடிப்படையி லும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக வும் கருதுவ தாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Thanks for Your Comments