இந்தியா- பாகிஸ்தான் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று செய்தி யாளர்களை சந்தித்துப் பேசி யுள்ளார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக த்தின் செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார்.
அவர் பேசுகையில், 'பாகிஸ்தான், தாங்கள் ஒரு புதிய நாடு என்றும், புதிய எண்ணம் கொண்டு இயங்குவ தாகவும் கூறி யுள்ளனர். அப்படி யென்றால் பாகிஸ்தான், அவர்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்பு களுக்கு எதிராக புதிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும்' என்று காட்டமாக தெரிவித் துள்ளார்.
அவர் மேலும், 'ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, தங்கள் தேசத்தில் இருந்து இயங்க வில்லை என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தொடர்ந்து சமாளித்து வருகிறார். இந்தியா, எடுத்துக் கூறும் பிரச்னை களைத் தீர்க்க பாகிஸ்தான் தயாராக இல்லை' என்றார்.
Thanks for Your Comments