கண்காணிக்க நிபுணர்கள் மய்யம் எப்படி இயங்குகிறது?

0
ஒவ்வொரு மாவட்டங்களி லும் கூட்டங்கள் நடத்தி, கட்சிக்கென அலுவலகங்கள் திறந்து, மக்களை உறுப்பினர்க ளாகச் சேர்த்து, மக்களோடு போராட்டங்களில் நேரடியாகக் களத்தில் இணைந்து என மக்களோடு மக்களாகக் கட்சிகள் இயங்கியது ஒரு காலம். இந்தப் பணிச் சுமையையும், நெருக்கத்தை யும் தற்போது பாதியாகக் குறைத்து விட்டது தொழில்நுட்பம். இன்று பெரும்பாலான கட்சிகளில் மொபைல் போன் மூலமாகவே உறுப்பினராகி விட முடியும்.
மய்யம் எப்படி இயங்குகிறது?


கட்சித் தலைவர்களின் உரைகளையும், கட்சியின் அறிக்கை களையும் சோஷியல் மீடியாக் களிலேயே பார்த்துவிட, படித்துவிட முடியும். அந்தளவிற்கு இன்றைய கட்சிகளுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குகிறது தொழில் நுட்பம். அதனால் தான் தேசியக் கட்சியில் இருந்து லெட்டர்பேடு கட்சிகள் வரை அத்தனையும் அதன் வசதிக்கேற்ப ஐ.டி விங்குகளை வைத்துக் கொண்டு சுற்றுகின்றன.

இந்த ஃபார்முலாவை கட்சியைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே பின்பற்றத் தொடங்கி விட்டார் கமல். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப்பெயர் அறிவிக்கப் படுவதற்கு முன்பே, 'மய்யம் விசில்' என்ற செயலியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு அச்சாரம் போட்டவர், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி செயலியையும் வெளியிட்டார்.

சமூகப் பிரச்னைக ளுக்கான ஆராய்ச்சி மணியை எங்கிருந்து வேண்டு மானாலும் அடிக்கலாம் என்பது தான் இந்தச் செயலியின் சிறப்பம்சம். வெளியிடப்பட்ட அடுத்த நாளில் இருந்தே, இதன் மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்.

மக்களின் புகார்களை அரசாங்கத்தின் செவிகளுக்கு கொண்டு செல்லும் ஓர் ஊடகமாக, விசில் செயலி பரவலாகப் பாராட்டப் பட்டாலும், இதில் புகார் அளிக்கவேண்டுமென்றால் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினராக வேண்டுமே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

எப்படி செயல்படுகிறது மய்யம் விசில்?

ஆப்-ஐ டவுன்லோடு செய்து விட்டு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் உடனே கணக்கு தொடங்கப் பட்டதற்கு அடையாளமாக நம் மொபைலுக்கு OTP வரும். அது செயலிக்கான அக்கவுன்ட் மட்டுமல்ல; மக்கள் நீதி மய்யத்திற் கான உறுப்பினர் எண்ணும் கூட. பின்னர் பாஸ்வேர்டு செட் செய்து விட்டு உள்ளே நுழைந்தால், கமலின் வீடியோ உங்களை வரவேற்கும்.

அதனைப் பார்த்து முடித்து விட்டால் போதும்; மய்யம் விசில் ரெடி. சாதாரண குடிமகன் அல்லது சாம்பியன் என இரண்டு விதமாக இதில் பதிவு செய்து கொள்ள முடியும். குடிமகனாகப் பதிவு செய்தால், செயலியில் புகார்களைப் பதிவு செய்யவும், பார்க்கவும் முடியும். சாம்பியனாகப் பதிவு செய்தால், பிறர் புகார்களைப் பார்த்து அது சரியானது என உறுதி செய்யவும் முடியும்.

மய்யம் விசிலில் பதியப்படும் புகார்கள் அனைத்தும், உடனுக்குடன் நிர்வாகிக ளால் சரி பார்க்கப்பட்டு பின்னர் செயலியில் வெளியிடப்படும். இந்தப் புகார்களை தொகுதி வாரியாகப் பார்க்க முடியும். இந்தப் புகார்களின் உறுதித் தன்மையை சரி பார்த்த பின்பு தான் மக்கள் நீதி மய்யம் அந்தப் புகாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த முதல்கட்ட சரி பார்ப்புக்காக, புகார் பதிவு செய்யப்பட்ட தொகுதியில் இருக்கும் மூன்று சாம்பியன் களின் ஒப்புதல் தேவை. அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் அந்தப் புகார்கள் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைக் கப்படும். இந்தச் செயலியில் வரும் புகார்களைக் கையாள்வதற் காக மண்டல வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப் பட்டிருக்கின்ற னர்.
எப்படி செயல்படுகிறது மய்யம் விசில்?


உறுதி செய்யப்பட்ட புகார்கள் அனைத்தும் அவர்களிடம் கொடுக்கப் பட்டதும், அவர்கள் அதன் மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுத்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் கொண்டு செல்வார்கள். நிறைய பிரச்னைகள் குவியும் போது பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து, முன்னுரிமை தந்து பரிசீலிப்பார்கள்.

இப்படி அரசிடம் கொண்டு செல்லப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை அனைத்தும் செயலியில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். பொதுவாகப் பார்த்தால், மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற் காகவும், தங்களைச் சுற்றி யிருக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்வதற் காகவும் ஒரு நல்ல செயலி என்று தான் தோன்றும். ஆனால், இதன் செயல்பாடுகள் குறித்து சில கேள்விகளும் எழுகின்றன.

பொது மக்களுக்கான செயலி எனச் சொல்லப்படும் இதில் புகார்களைப் பதிவு செய்யச் சென்றால் எதற்காக மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக வேண்டும்? அரசிடம் புகார் கொடுக்க ஏற்கெனவே நிறைய இணைய தளங்கள், புகார் மையங்கள் இருக்கும் போது மய்யம் விசிலில் பதிவிட்டால் மட்டும் எப்படி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

இதில் மக்கள் பதிவு செய்யும் தகவல்களை கட்சி எப்படி பயன்படுத்தப் போகிறது? இந்தக் கேள்விகளை அப்படியே மய்யம் விசிலின் தொழில் நுட்ப பிரிவினரிடம் கொண்டு சென்றோம். "மக்களின் பிரச்னை களைக் கேட்டறிவதோ, சமூகப் பிரச்னைகளுக் காக குரல் கொடுப்பதோ எங்களுக்குப் புதிதல்ல; இத்தனை ஆண்டுகள் இந்தப் பணியை ரசிகர்கள் மூலமாகவும், நற்பணி மன்றங்கள் மூலமாகவும் செய்து வந்தோம்.

இப்போது அதனைத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டலில் செய்து கொண்டிருக் கிறோம்; அவ்வளவு தான் வித்தியாசம். இது வரைக்கும் தங்களைச் சுற்றி நடக்கும் குற்றங்களையும், சமூகக் கேடுகளையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்களை, முதல் முறையாக எங்கள் செயலி மூலம் குரல் கொடுக்க வைத்திருக் கிறோம்.

இது தான் எங்களின் வெற்றி. செயலியை வெளியிட்டத்தில் இன்று வரைக்கும் நாளொன்றுக்கு ஆயிரம் புகார்களுக்கு மேல் வருகின்றன. அவை அத்தனையையும் கவனமாகப் பரிசீலித்து பின்னர் நடவடிக்கைக் காக அனுப்பிக் கொண்டிருக் கிறோம். புகார்களைக் கையாள்வ தற்காகவும், அதுகுறித்து ஆலோசனை வழங்குவதற் காகவும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கொண்ட குழு இங்கே செயல்பட்டு வருகிறது.

இது வரைக்கும் நாங்கள் அளித்த பல புகார்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் வந்திருக்கிறது. இந்தச் செயலி மூலம் குறைகளை நாங்களே சரி செய்வோம் என எப்போதும் சொன்னதில்லை; அந்தப் புகாரை சரிசெய்ய அரசிடம் எப்படி கொண்டுசெல்ல வேண்டுமோ அப்படி கொண்டு செல்வோம். அதுதான் எங்களின் பணி.

சுமார் 7 மாதங்கள் பணிசெய்து, நிறை குறைகள் எல்லா வற்றையும் அலசி ஆராய்ந்து தான் செயலிக்கு இறுதி வடிவம் கொடுத்திருக் கிறோம். தேவையைப் பொறுத்து எதிர் காலத்தில் இன்னும்கூட மாற்றம் செய்யப்படும். இப்போதைக்கு ஒவ்வொரு மாவட்டத் திற்கும் ஓர் அட்மின் இருக்கிறார். அவர் தான் அந்த மாவட்டத்தில் இருக்கும் புகார்களையும் கவனித்துக் கொள்கிறார்.

எதிர் காலத்தில் 234 தொகுதிகளி லும் மய்யம் விசிலுக்கான அட்மின்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; முதலில் இதனை வெளியிடும் போது நகர்ப் புறங்களில் மட்டும்தான் அதிகளவில் புகார்கள் குவியும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பாரா விதமாக கிராமங்களில் இருந்து தான் அதிகளவில் புகார்கள் வருகின்றன. அதே போல இளைஞர்கள் அதிகளவில் புகார்களைப் பதிவு செய்கின்றனர்.

சின்னச் சின்னப் புகார்கள் என்றால் அதிகாரிகளிடம் நிர்வாகிகள் மூலம் புகாரளிக்கப்படும். இதே பெரியளவிலான புகார்கள், ஊழல் என்றால் கமலே களத்தில் இறங்குவார். புகார் கொடுப்பவரின் அடையாளங்கள் உறுதியாகப் பாதுகாக்கப்படும்" என்றவர்கள் செயலியின் மீதான விமர்சனங் களுக்கும் விடையளித்தனர். "உறுப்பினர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் அனைவரும் பதிவு செய்யலாம் எனச் செயலியை மாற்றுவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலு மில்லை. 

ஆனால், கண்டிப்பாக உறுப்பினா ராகச் சொல்வதற்கு காரணம், பொய்யான புகார்கள், தேவையற்ற செய்திகள் (Spams) பதிவிடுதல் போன்ற வற்றைத் தடுப்பதற்காகத் தான். அப்படி தினந்தோறும் போலிப் புகார்கள் அதிகளவில் வந்தால், அவற்றைக் கண்டறிவ திலேயே பெரும்பாலான நேரம் செலவாகி விடும். அதனால் தான் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் மட்டும் புகார்களைப் பதிவு செய்யும்படி வைத்திருக் கிறோம்.

இதன் மூலம் தேவையற்ற செய்திகள் பதிவாவது குறையும். ஒருவேளை உறுப்பினராகாமல் புகார்களைப் பதிவு செய்ய வேண்டு மென்றால், உறுப்பினராக இருக்கும் வேறொரு நண்பரின் கணக்கில் இருந்து கூட புகாரைப் பதியலாம். இல்லை அதுவும் வேண்டாம் என்றால் பதிவு செய்ததை, unregister செய்து கொள்ளவும் முடியும்.

இந்தச் செயலி மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பது எங்கள் நோக்கமல்ல; இப்படி உறுப்பினர் சேர்க்க வேண்டிய அவசியமும் எங்களுக் கில்லை அதுதான் எங்கள் நோக்கம் என்றால் அதற்காகத் தனியாகவே ஒன்றை உருவாக்கிவிடலாமே? மேலும், இதில் பதிவு செய்பவர்கள் எல்லோருமே புதியவர்கள் அல்ல; ஏற்கெனவே கட்சியில் இணைந்தவர்கள் தான் அதிகளவில் பயன்படுத்து கின்றனர்.
மய்யம் செயலி


வருங்காலத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில் சாதாரண பொது மக்களே கூடப் புகார் அளிக்கும்படி மாற்றி விடுவோம். இதில் அதிகம்பேர் புகார் அளிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல; கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் குறைகள் தீர்ந்து, இதில் புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை பூஜ்யத்தை தொட வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம். முதல்வன் படத்தின் புகார் பெட்டி போலத் தான் இதுவும்.

ஒரு புகாரை சாதாரண குடிமகன் கொடுத்து விட்டு அதனை அப்படியே விட்டு விடுவதற்கும், மக்கள் நீதி மய்யம் அந்தப் புகாரைக் கையாள் வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதில் புகார் அளிக்கும் வசதி மட்டுமல்ல; உங்கள் பகுதியில் இருக்கும் மொத்தப் பிரச்னை களையும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. தன் தொகுதியின் நிலை குறித்து எந்தவொரு குடிமகனும் இதன் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இப்படி மக்கள் தொடர்ந்து பதிவு செய்யும் புகார்கள் மூலமாக சமூகப் பிரச்னைகளை நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறோம். அவற்றை அரசிடம் கொண்டு செல்லும் போது ஏற்படும் சிக்கல்களைப் பார்க்கும் போது நிர்வாகச் சிக்கல் களையும், குளறு படிகளையும் எங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. 

எங்களைப் போன்ற புதிய கட்சி ஒன்றுக்கு இந்தப் பிரச்னைகள் மிகச்சிறந்த பாடம். நாளை மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை தயாராகிறது என்றால், அதில் இந்தப் பிரச்னைகள் தான் முன்னணியில் இருக்கும்; எங்கள் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது இந்தப் பிரச்னைகள் அனைத்திற்கும் உடனடித் தீர்வும் கிடைக்கும்.

நாங்கள் சமூகப் பிரச்னைகளுக்கு சினிமாவில் மட்டும் குரல் கொடுக்க வில்லை; அரசு அதிகாரத்திற்கு எதிராக நேரடியாகவே குரல் கொடுக்கிறோம். வெளியே இருந்து கொண்டு சிஸ்டம் சரியில்லை எனச் சொல்லவில்லை; அந்த சிஸ்டம் எப்படி யிருக்கிறது என்பதை உள்ளே இறங்கி பார்க்கிறோம்." என்கின்றனர் சீரியஸாக.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings