சந்தேகப் புத்தியால் மனைவியைக் கொன்ற கணவன் !

0
சென்னை புளியந்தோப்பில் சந்தேகப் புத்தியால் மனைவியின் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். புளியந்தோப்பு திருவிக நகர் மசூதி தெருவில் வசித்தவர் துக்காராம் (42). இவரது மனைவி தாராபாய் (33). துக்காராம் போரூரில் ஒரு செருப்பு தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார். 
சந்தேகப் புத்தியால் மனைவியைக் கொன்ற கணவன்


மனைவி தாராபாய் வில்லி வாக்கத்தில் ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 14, 12, 10 வயதில் மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். துக்காராம், தாராபாய் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் தாராபாயின் நடத்தையில் துக்காராமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி மீதான சந்தேகம் அதிகரித்த தால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகாரித்து அக்கம் பக்கத்தினர், மகன்கள் அவர்களை சமாதானப் படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டனர்.

இரவு 11 மணிக்கு மேல் துக்காராமு க்கும் அவரது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் ஒருவாறாக சமாதானம் ஆகிய நிலையில் மனைவி தூங்கி யுள்ளார். அப்போது ஆத்திரம் அடங்காத துக்காராம் மனைவியின் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

ரத்த வெள்ளத்தில் மனைவி உயிரிழந்ததும், துக்காராம் போலீஸார் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி உத்தரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாத மகன்கள் மூவரும் உறங்கி யுள்ளனர். 


காலையில் எழுந்து பார்த்த போது தாய் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகவும் கிடந்ததைப் பார்த்த மகன்கள் அதிர்ச்சி யடைந்து அழுதுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக புளியந்தோப்பு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவர் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகப் புத்தியால் குருவிக்கூடு போன்ற அழகான குடும்பம் சிதைக்கப்பட்டு மகன்கள் மூவரும் அனாதைக ளாக்கப்பட்டு விட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings