மோடி நினைத்தால் பாகிஸ்தான் காலி - ராஜேந்திர பாலாஜி !

0
மோடி கண்ணசைத் தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. 
மோடி நினைத்தால் பாகிஸ்தான் காலி


இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், “அதிமுக அமைத்திருப்பது மங்கள கரமான கூட்டணி. திமுக அமைத்திருப்பது மங்கிப் போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. 

அது ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி. தேசப்பற்றுள்ள மோடி நாட்டின் பிரதமராக வர வேண்டும். இந்திய இறையாண்மையை பாதுகாக்கின்ற பாஜக, அதிமுக, பாமக போன்ற மக்கள் நலக்கூட்டணியை ஆதரியுங்கள். இந்திய இறை யாண்மைக்கு வேட்டு வைக்கின்ற கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள்.

மோடி கண்ணசைத் தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது. இந்த விஷயத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு இளைஞனும் மோடியின் கரத்தை வலுப்படுத்த தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings