மக்களின் பிரச்னையை தீர்க்கும் இன்ஸ்பெக்டர் பலியான சோகம் !

0
மூளைக்குச் செல்லும் நரம்பில் கோளாறு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை செய்யப் பணம் இல்லாததால் நேர்மையான இன்ஸ்பெக்டர் பலியான சோகம் காவல்துறை வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நெல்லை மாவட்டம், அம்பா சமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. 
மக்களின் பிரச்னையை தீர்க்கும் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்


காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு நித்திஷ் என்ற 18 வயது மகன் உள்ளார். நித்திஷ், சென்னை அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இன்ஸ்பெக்டர் ராமையா, நெல்லை மாவட்டத்தில் தேவர்குளம், பாளையங் கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணி யாற்றினார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னைக்கு மாறுதலானார். இன்ஸ்பெக்டர் ராமையா நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்தவர், அவர் பணியாற்றிய அனைத்துக் காவல் நிலையங் களிலும் பொது மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர். அத்துடன் யாரிடமும் எந்தவித கையூட்டும் பெறாமல் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர் என்கிற பெயரைப் பெற்றவர். 

கடந்த 3-ம் தேதி சென்னை ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற அவர், தனது பணிகளைத் திறமை யாகச் செய்து வந்தார். கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத் துடன் வசித்து வந்த அவருக்கு சில தினங்களாகக் கடுமையான தலைவலி இருந்துள்ளது. கடந்த 8-ம் தேதி ராமையா பணியில் இருந்த போது தலைவலி யால் அவதிப் பட்டுள்ளார். 

அதனால் அவர் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனால், அங்கும் தலைவலி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் தாங்க முடியாமல் துடித்துள்ளார். காவல் நிலையத்து க்கு ரவுண்ட்ஸ் வந்த அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், அங்கே இன்ஸ்பெக்டர் இல்லாதது குறித்து காவலர்களிடம் விசாரித்த போது அவர்கள் நடந்த விவரத்தைக் கூறியுள்ளனர். 

அதனால் உதவி கமிஷனர் பாலமுருகன், அங்கிருந்து ராமையா வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார். அப்போது அவர் தலைவலி யால் துடித்ததைப் பார்த்தது, அருகில் இருந்த தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இன்ஸ்பெக்டர் ராமையாவின் மூளைக்குச் செல்லும் நரம்பில் கோளாறு இருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர். அதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இன்ஸ்பெக்டர் ராமையாவின் மருத்துவ செலவுக்குப் போதிய பணம் இல்லை. மேலும், புதிய இடத்துக்கு மாறுதலாகி வந்ததால் பணத்தை ஏற்பாடு செய்வதிலும் குடும்பத்தி னருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரைத் தனியார் மருத்துவ மனையி லிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு மாற்றி யுள்ளனர். 

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் நேற்று (18-ம் தேதி) இரவு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சிங்கம் பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட உள்ளது. 

நேர்மையான அதிகாரி யாகச் செயல்பட்ட ராமையாவிடம் போதிய பணம் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings