நள்ளிரவு 1 மணி... யாரோ பேசுவதுபோல் சப்தம் கேட்டு விழித்துக் கொண்ட அம்மா, படுக்கையறைக் கதவுகளைத் திறந்து பார்த்தார். ஒரு நொடி பதறிப் போனார்.
அவரின் மகன் இருட்டு அறையில் கையில் மொபைலுடன் காதில் ஹெட்போன் போட்டுக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்தார்.
தன் மகன் காதலியுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என நினைத்த அம்மா, `என்னடா பண்ற இந்த சமயத்துல...’ என்று போனை பிடுங்கிப் பார்த்தார்.
அம்மா பயந்தபடி எதுவும் இல்லை. கேம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தது அவரின் கேம் பார்ட்னர்.
இருவரும் Pubg சோல்ஜர்க்களாம். இது தோழி ஒருவர் வீட்டில் நடந்த சம்பவம். இப்போ தெல்லாம் இந்த பப்ஜியன்ஸ் அலப்பறைகளுக்கு அளவேயில்லை.
எங்கு நோக்கினும் பப்ஜி மயம். அலுவலகத்தில் அருகில் இருப்பவர் திடீரென `சிக்கன் டின்னர் கிடைத்து விட்டது’ என்று கத்துகிறார்.
`Player Unknown’s Battlegrounds’ இது தான் PUBG-யின் விரிவாக்கம். இந்தியாவு க்குள் சில மாதங்கள் முன்னர் தான் காலடி எடுத்து வைத்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசப்படுத்திக் கொண்டது. பப்ஜி கேம்மில் சிறுசிறு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தீவில் 100 பேர் களமிறக்கப் படுவார்கள்,
ஒருவரை ஒருவர் வீழ்த்தி கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்தாம் வெற்றியாளர். இந்த விளையாட்டை நண்பர்களு டனும் இணைந்து விளையாடலாம்.
உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் இவை தான் பப்ஜியின் ப்ளஸ். இதனால் தான் இளைஞர்கள் இளைஞிகள் இதில் மூழ்கிப் போகின்றனர்.
குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் தனித் தனி க்ரூப்கள் அமைத்து முழுநேரமும் பப்ஜியில் மூழ்கித் திளைக்கின்றனர்.
இதனால் பலர் படிப்பையும் கோட்டை விடுகின்றனர். சில கல்லூரி நிர்வாகங்கள் வாய் வழியாக மாணவர்களை கேம் விளையாடக் கூடாது என அறிவுறுத்தி வருகிறது.
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் (VIT) மாணவர்கள் பப்ஜி விளையாடத் தடை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வி.ஐ.டி ஆண்கள் விடுதிக்கு விடப்பட்ட அறிவிப்பில் `பப்ஜி போன்ற கேம் விளையாட பல்கலைக்கழக வளாகத்தினுள் தடை செய்யப் பட்டுள்ளது.
விடுதி அறைகளில் பப்ஜி விளையாடுவது விடுதியின் சூழலைப் பாதிக்கிறது. மற்ற மாணவர்களு க்குத் தொந்தரவை கொடுக்கிறது.
அதற்குப் பதில் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழிக்க லாம்.
இனி வி.ஐ.டி விதிகளை மீறி மாணவர்கள் பப்ஜி விளையாடினால் தண்டிக்கப் படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
பப்ஜி ட்ரெண்ட்டாகி வருகிறது என்று சொல்வதைவிட இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது என்று சொல்லலாம். இது உண்மையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னை.
இதை உணர்ந்ததால் தான் சர்வதேச புகழ்பெற்ற வி.ஐ.டி நிர்வாகம் இந்தக் கடுமையான நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.
பொதுவாகவே மொபைல் என்னும் சாதனம் மனிதர்களு க்குள் ஒரு பெரிய இடைவெளியை உண்டாக்கி விட்டது.
இது போன்ற மொபைல் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமை யாவதுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன? அதிலிருந்து வெளியே வருவது எப்படி...
சேலம் மனோரக்ஷா மனநல மருத்துவ மையத்தின் இயக்குநரும் மனநல மருத்துவருமான டாக்டர் எஸ்.மோகன் வெங்கடாசலபதி கொடுத்த விளக்கம் பின்வருமாறு...
`கேம் அடிக்ஷன் என்பது இன்றைய இளைய தலைமுறை யின் மிகப்பெரிய பிரச்னையாகக் கருதப்பட வேண்டியது.
முழு நேரமும் மொபைல் பேனையே கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை `Screen dependency syndrome' என்கிறார்கள்.
மது, புகையிலை போன்ற வற்றின் போதைக்கு அடிமையாவது மட்டும் பிரச்னை கிடையாது. மொபைலுக்கு அடிமையாவதும் பிரச்னைக்கு வழிவகுக்கும்.
இது ஒரு வகையான Behavioral addiction. சிலர் ஷாப்பிங் செய்வதற்கு அடிமையாக இருப்பார்கள், சிலர் தான் எப்போதுமே தலைவராக இருக்க வேண்டும் என்பதில் அடிமையாகி யிருப்பார்கள்.
இவை அனைத்துமே Behavioral addiction என்று சொல்லலாம். இந்த வரிசையில் மொபைல் போனில் சேட் செய்வது, கேம் விளையாடுவது, ஃபேஸ்புக் பார்ப்பது இவையனுத்துமே வரும்.
இந்த நவீனக் கால அடித்தனத்துக்கு மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் முக்கிய காரணம். இன்றைய தலைமுறை யினர் இயந்திர வாழ்க்கை வாழ்கின்றனர்.
இந்த `Routine' வாழ்க்கையால் ஏற்படும் மனச்சோர்வை போக்க இயற்கையான வழியில் இளைப் பாறாமல், செயற்கை உலகத்துக்குள் சென்று விடுகின்றனர்.
இதனால் பலர் introverted (அகமுகர்) ஆக மாறி விடுகின்றனர். தங்களை தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.
மேலும், பலர் தங்கள் மீதான தன்னம்பிக்கை குறையும் போதும் சக மனிதர்கள் உடனான உரையாடல் களைக் குறைத்துக் கொள்கின்றனர்.
அதாவது, Self Esteem குறையும் போது மொபைல் போன் போன்ற சாதனங்களுடன் நெருக்கமாகி விடுகின்றனர்.
நாளடைவில் இது அவர்களில் உடல் நிலையைப் பாதிக்கும். மனச்சோர்வை அதிகரிக்கும். ரத்த அழுத்தம், உடல் சோர்வு, கண்பார்வை பிரச்னைகள் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும்.
அகால மரணங்கள் (Prematured deaths) எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். மொபைல் கேம் விளையாடும் அனைவருக்குமே இந்தப் பாதிப்புகள் இருக்காது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் சுய கட்டுபாடு இல்லாமல் அதிக நேரத்தை மொபைலில் செலவிடுவோருக்கு தான் மேலே சொன்ன பிரச்னைகள் வரும்.
இந்த நவீன கால அடிமைத்தனத்தி லிருந்து மீள்வது சுலபம். உடற்பயிற்சி செய்யலாம், புதிய இடங்களுக்கு பயணம் செய்யலாம்,
செல்லப் பிராணிகளை வளர்க்கலாம், மாடித் தோட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
காலையில் எழுந்ததும் எந்த வித எதிர்மறை சிந்தனைகளும் இல்லாமல் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மனச்சோர்வை போக்கும். பாசிடிவ் எண்ணங்களை உருவாக்கும்.
மாலை அலுவலகம் முடிந்து வந்ததும் மொபலைத் தூக்கி வீசி விட்டு க்ரீன் டீ குடித்து விட்டு, குடும்பத்தோடு உரையாடலாம்.
உங்களால் எதுவுமே செய்ய முடிய வில்லை என்றால், வடிவேலு காமெடி பாருங்கள். மனிதர்கள் உடனான உரையாடல் களை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
இரவு 9 மணிக்கு உறங்குவது தான் என்றுமே ஆரோக்கியத்தின் முதல்படி. வாழ்க்கை முறையில் இது போன்ற மாற்றங்களைக் கொண்டு வரவில்லை எனில்
இளைமைக் காலத்தில் ஓடி உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொஞ்சம் வயதானதும் மருத்துவத்துக்குச் செலவு செய்ய வேண்டியதாகி விடும்” என்றார் எச்சரிக்கை தொனியுடன்.
பப்ஜி வீரர்களே புரிகிறதா? உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்.
Thanks for Your Comments