ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் இன்று விபத்துக் குள்ளானது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் பைலட் உயிர் தப்பினார். பிகானிரின் தானி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக் கின்றது.
மிக் 21 ரக போர் விமானம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடு பட்டிருந்தது. இன்று மதியம் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. முதல் கட்டமாக பறவை மோதியதால் விபத்து நடந்திருப்பதா தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பிகானிர் போலீஸ் எஸ்.பி. மோகன் சர்மா கூறுகையில், முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வில்லை என்று தெரிவித்தார்.
முதலில் கடந்த 1960 களில் நடைபெற்ற இந்தியா - சீனா போரின் போது மிக் ரக விமானங்கள் இந்திய விமானப் படையில் அறிமுகம் செய்யப் பட்டன. இவை கடந்த 2006-ல் அப்கிரேட் செய்யப்பட்டு மிக் 21 போர் விமானங்கள் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டன.
Thanks for Your Comments