அவங்க இருக்கிற இடத்துக்கு நாங்க வர மாட்டோம் - பாரிவேந்தர் !

0
பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து விலகியுள்ள பாரிவேந்தர் தலைமை யிலான இந்திய ஜனநாயகக் கட்சி, திமுக-வுக்கு ஆதரவு கொடுத் துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இன்று சென்னை, தேனாம் பேட்டையில் இருக்கும் அண்ணா அறிவாலய த்தில் பாரிவேந்தர் தனது கட்சி நிர்வாகிக ளுடன் சந்தித்தார். 
பாரிவேந்தர்
அப்போது, வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஐ.ஜே.கே முழு ஆதரவு கொடுக்கும் என்று உறுதி யளித்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாள ர்களிடம் பேசிய பாரிவேந்தர், ‘தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் தேவைப் படுகிறது. அதை மக்களும் உணர்கி றார்கள். 

இது குறித்து கடந்த புதன் கிழமை எங்கள் தலைமை அலுவலக த்தில் கூடிய அவசர செயற்குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்து க்குத் தேவையான மாற்றத்தை மு.க. ஸ்டாலின் அவர்களால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்று முடிவெடுக்கப் பட்டது. 


அதன் அடிப்படை யில் இன்று அவரை நேரில் சந்தித்து வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-வு க்கு முழு ஆதரவு கொடுப்ப தாக தெரிவித் துள்ளோம்' என்றார். உடனே ஒரு செய்தியாளர், ‘தேர்தலில் போட்டி யிடுவது குறித்து பேசினீர்களா?' என்றார். 

அதற்கு பாரிவேந்தர், ‘இன்றைய சந்திப்பு என்பது, அவர்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டத் தான். தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பின்னர் பேசப்படும்' என்று முடித்தார். இன்னொரு செய்தியாளர், ‘தே.ஜ.கூ கூட்டணி யிலிருந்து விலகுவ தற்கு என்ன காரணம்?' என்றார். 

‘நாங்கள் ஏன் அந்தக் கூட்டணி யில் இருந்து விலகினோம் என்பது பலருக்குத் தெரியும். எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், பல்கலைக் கழகத்துக்கும் தொல்லை கொடுத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி அந்தக் கூட்டணியில் இணைந் துள்ளது. 

அவர்கள் இருக்கும் இடத்தில் எங்களால் இருக்க முடியாது' என்று திட்ட வட்டமாக சொல்லி புறப்பட்டார் பாரிவேந்தர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings