அபினந்தனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு !

0
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன் வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தி னரால் ஒப்படைக்கப் பட்டார். 


பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை இன்று விடுவிப்ப தாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் நாடாளு மன்றத்தில் கூறியிருந்தார்.

அமைதியை வலியுறுத்தும் நோக்கில் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப் படுவதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, வாகா எல்லையில் அபினந்தன் விடுவிக்கப் படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கர வாதிகள் முகாமை அழித்தது. 

இதை யடுத்து, எல்லை கட்டுப் பாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ நிலையங் களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற 24 பாகிஸ்தான் போர் விமானங் களை, இந்தியாவை சேர்ந்த 7 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி, பதில் தாக்குதல் மேற்கொண்டது. 

இதில் மிக்-21 ரக போர் விமனாத்தை இயக்கிய போர் விமானி அபினந்தன் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் f-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து நடந்த பதில் தாக்குதலில் அபினந்தன் விமானம் பாகிஸ்தா னால் சுட்டு வீழ்த்தப் பட்டது. இதை யடுத்து, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பித்து குதித்த அபினந்தன் பாகிஸ்தான் பகுதியில் தரை யிரங்கியதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறை வைக்கப் பட்டார்.

இதை யடுத்து, எந்த நிபந்தனையு மின்றி பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்திய வந்த நிலையில், நல்லெண்ண அடிப்படை யில் இந்திய விமானி அபினந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார்.


பின்னர், அபினந்தன் வர்தமனை, தாயகம் அழைத்து வர இந்திய அரசு தரப்பு, பாகிஸ்தானு க்கு ஒரு சிறப்பு விமானப்படை விமானத்தை அனுப்பலாம் என்று திட்ட மிட்டிருந்தது, அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்து விட்டதாக NDTV-க்குத் தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து அபிந ந்தன் வாகா எல்லையில் ஒப்படைக்கப் படுவார் என தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்திய வீரர் அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் உள்ள அத்தாரி பகுதியில் பெரும் அளிவிலான மக்கள் கூட்டம் கூடியது. 

இதே போல், அபினந்தனின் வீரத்தைப் பறை சாற்றும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக இந்திய அளவில் #WelcomeBackAbhi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings