மனிதர்கள், விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாலும் மாறி வரும் தட்ப வெப்ப நிலையாலும் மனிதர்கள் – விலங்குகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்ப்படு கின்றன. இதுவே இப்போது ரஷ்யாவிலும் நிகழ்ந்துள்ளது. சென்ற மாதம் ரஷ்யாவின் கிரமத்திற் குள் சில பனிக் கரடிகள் புகுந்தன.
ஆர்டிக் பனிப் பிரதேசத்தில் இருப்பிடம் கொண்டது இந்தப் பனிக் கரடிகள். ஆர்டிக்கில் பனிகள் உருவாக் காலதாமதம் ஆனதால், மாற்று உணவுத் தேடி, நோவையா ஜெம்ப்லயா தீவின் வடக்கே உள்ள பெல்யுஷா குபா கிராமத்திற்குப் படையெடுத் துள்ளன ஐம்பது பனிக் கரடிகள்.
ரஷ்யா, யூ.எஸ்.எஸ்.ஆர் ஆக இருந்த போது அணு ஆராய்ச்சி செய்த இடம் நோவையா ஜெம்ப்லயா. அதன் பின் ரஷ்யா உருவான போது, இங்கு பல புதுக் கட்டங்களை கட்டவும் மக்கள் வாழவும் அணுமதித்தது ரஷ்யா. இந்த இடத்தை இராணுவ பயன்பாடுக்கே ரஷ்யா அதிகம் உபயோ கிக்கிறது.
இந்நிலையில், உலகின் அதிவேகமாக பனி உருகுவதும் இங்கு தான் என்பது கவனத்திற்க் குரியது. பனி உருவாகவும் இங்கு நேரம் பிடிக்கிறது. இதனால் கடல் சிங்கத்தை உண்ண முடியாத பனிக் கரடிகள் ஊருக்குள் புகுந்தன. அங்கு கிடந்த குப்பைகளை உண்னத் துவங்கின பனிக் கரடிகள்.
இந்த அதிர்ச்சியான அதே சமயம் பனிக் கரடிகளின் பரிதாப நிலை புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் பரவத் துவங்கி யுள்ளன. பனிக் கரடிகள் குறித்து 1980 முதல் படித்து வரும் கொஷ்னெவ் கூறுகையில், ‘1991 ஆம் ஆண்டுக்குப் பின் ரஷ்யாவின் அணு ஆராய்ச்சி யாளர்கள் இந்த இடத்தில் இருந்து வெளியேறினர்.
அதன் பின் தான் பனிக் கரடிகளுக்கு விடிவு காலம் துவங்கியது. ஆனால், இப்போது மறுபடியும் பனிக் கரடிகளின் இருப்பிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கத் துவங்கி யுள்ளனர்' என்றார். ரஷ்யா, கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இடத்தை இராணுவத்தின் முக்கிய இடமாக அறிவித்தது.
இது பனிக் கரடிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறி ஆக்கி யுள்ளது. தன் கருத்துக ளால் தனது வேலையை இழந்த கொஷ்னெவ், இனி வரும் காலங்களி லும் பனிக் கரடிக்கும் மனிதர்களு க்கும் பல மோதல்கள் ஏற்படும் என எச்சரித் துள்ளார்.
‘இதே நிலை தொடர்ந்தால், பனிக் கரடிகள் ரஷ்யாவைவிட்டு கனடாவிற்கு இடமாற்றம் ஆகிவிடும். இங்கு இருக்கும் மீதி பனிக் கரடிகள் மனிதர்களால் கொல்லப்படும்' என தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார் கொஷ்னெவ்.
Thanks for Your Comments