உன்னை ஃப்ரெண்டுனு நம்பித்தான வந்தேன்... இப்பிடிப் பண்றீயே... ப்ளீஸ் விட்டுரு!’ என்று கதறுகிறார் அந்த இளம் பெண். அதைத் துளியும் பொருட் படுத்தாமல், அந்தப் பெண்ணின் மேலாடையை உரித்து, தனக்குப் பின்னால் இருப்பவனிடம் கையைக் காட்டி வீடியோ எடுக்க ச்சொல்கிறான்,
அந்தக் கொடூரன். திடீரென நுழையும் கும்பலைப் பார்த்து, அதிர்ச்சியி லும் அவமானத்தி லும் துடிதுடித்துப் போகிறார், அந்த இளம்பெண்.
கைகளை மார்பின் குறுக்கே மறைத்துக் கொண்டு, அனைவரின் காலில் விழுந்து மன்றாடுகிறார் அந்தப் பெண்.. இறுதியில் எல்லோரும் சேர்ந்து அவளைச் சிதைக் கிறார்கள். இப்படி ஒன்று இரண்டு அல்ல...
எக்க ச்சக்கமான வீடியோக்கள். ஒவ்வொரு பெண்ணின் கதறலையும், கண்ணீரையும் பார்க்கும் போது, இதயம் நொறுங்கு கிறது... ‘இந்த மிருகங்களை என்ன செய்யலாம்?’ என்று மனம் கொதிக்கிறது.
கடந்த ஜூனியர் விகடன் இதழில், ‘பாலியல் பலாத்காரம்... வீடியோ பதிவு... பணம் பறிப்பு! பொள்ளாச்சி பயங்கரம்...’ என்கிற தலைப்பில் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களைச் சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த கும்பலைப் பற்றி எழுதியிருந்தோம்.
அந்தக் கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு(26) சபரி ராஜன் என்கிற ரிஷ்வந்த் (25), சதீஷ் (28), வசந்த குமார் (24) ஆகியோரை போலீஸ் கைது செய்திருக்கிறது.
பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளாகி, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக மேலும் நான்கு பேரைக் கைது செய்திருக் கிறது போலீஸ்.
இவர்கள் நான்கு பேரும் பிணையில் வந்து விட்டார்கள். இந்த நிலையில் தான், இந்தக் கும்பலில் இருப்பவ ர்களின் எண்ணிக்கை நான்கு பேர் மட்டுமல்ல...
சுமார் இருபது பேர்வரை கொண்ட பெரும் கும்பல் ஒன்று திட்டமிட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான பெண்களைச் சீரழித்திருப்பதும், இதன் பின்னணியில் கோடிக் கணக்கில் பணம் விளையாடி யிருப்பதும், அரசியல் வாதிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தீவிர விசாரணை யில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்! கைது செய்யப் பட்டவர்களிட மிருந்து இதுவரை 50-க்கும் அதிகமான வீடியோக் களைக் கைப்பற்றி யிருக்கிறது போலீஸ்.
ஆனால், இவ்வளவு நடந்தும், எதுவுமே நடக்காதது போல் அமைதி காக்கிறார்கள் கொங்கு மண்டல ஐ.பி.எஸ் அதிகாரிகள். இது போன்று, பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு.
ஆனால், கோவை எஸ்.பி அலுவலகம் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பில் புகார் கொடுத்த பெண்ணின் பெயர், அவரது ஊர் விவரங்களை வெளியிட்டிருக் கின்றனர். இதுவே புகார் தருபவர்களை மறைமுகமாக மிரட்டுவதுபோல இருக்கிறது.
இது போன்ற ஒரு கொடூரம் டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் நடந்திருந்தால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும். ஒரு சிறுநகரத்தில் இது நடந்துள்ள தால், எதிர் விளைவுகள் பெரிதாக இல்லை.
அதே சமயம், இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் வெடிக்க விடாமல் தடுப்பதில், போலீஸார் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சிலரும் கவனமாகச் செயல் படுகிறார்கள் என்பது உள்ளூர் மக்களின் குற்றச் சாட்டாக இருக்கிறது.
புகார் தரப்பு மீது தாக்குதல்!
இது தொடர்பாக, பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (20), நாகராஜ் (26) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தது போலீஸ்.
இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர். தாக்குதல் புகாரில் கைதான நான்கு பேருமே மூன்று நாள்களில் பிணையில் வெளி வந்து விட்டனர்.
இதனால், பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எந்தத் தைரியத்தில் புகார் கொடுக்க முன் வருவார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி யுள்ளன.
அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி தவிர, மற்ற கட்சிகள் எல்லாம் இந்த விஷயத்தில் ஒருமித்தகுரல் கொடுத் தாலும், போலீஸாரின் நடவடிக்கை கண் துடைப்பாகவே தெரிகிறது.
விஷயம் வெளியே வந்து, ஒரு வாரத்துக்கு மேலாகியும், எஸ்.பி நேரில் சென்று விசாரணை நடத்த வில்லை. கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்படும் நான்கு முக்கிய நபர்களான சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோரை கஸ்டடியில் எடுத்து போலீஸார் விசாரிக்க வில்லை.
தலை மறைவாக இருந்து, பின்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, போலீஸிடம் சிக்குவதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ வாக்கு மூலத்தில், ‘இந்த விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருக்கிறது.
அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்’ என்றும் சொல்லி யிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே சி.பி.சி.ஐ.டி விசாரணை கோருகிறார் என்றால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்ற கேள்வி எழுகிறது.
20 பேர் நெட்வொர்க்!
இந்த விவகாரம் தொடர்பாக, போலீஸார் மற்றும் பொள்ளாச்சி அரசியல் வட்டாரங்களில் பேசினோம். ‘‘இந்தக் கும்பலில், இருபது இளைஞர்கள் வரை உள்ளனர்.
பொள்ளாச்சியில் கேபிள் தொழில், ‘பார்’ குத்தகை என ஆளும் கட்சிப் பின் புலத்துடன் இவர்கள் சில தொழில்களைச் செய்தாலும், பெண்களை வளைத்து, பணம் சம்பாதிப்பதையே முழு நேரத் தொழிலாக வைத்திருந்தார்கள்.
எல்லாமே பக்கா நெட்வொர்க். விலை உயர்ந்த கார், பைக் மற்றும் உயர்ரக ஆடைகளில் அவர்கள் வலம் வருவார்கள்.
சினிமா ஹீரோக்கள் போல இருக்கும் அவர்கள், துல்லியமாகத் திட்டம் தீட்டி, நெகிழ்வா கவும் உருக்கமாக வும் பேசி, பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவார்கள்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் இளம் பெண்கள் தான் இவர்களின் டார்கெட். பெண்களை வழிக்குக் கொண்டுவர, பல உத்திகளை இவர்கள் கையாண் டுள்ளனர். ஃபேஸ்புக்கில் பெண்கள் பெயரில் ‘பேக் ஐ.டி’ தயாரித்து, முதலில் நட்பாவார்கள்.
பர்சனல் விஷயங்களை இன்பாக்ஸில் பகிர்ந்து கொள்வார்கள். தொடர்ந்து, உடல் இச்சை தொடர்பாக அறிவுரை கேட்பது போல சில கேள்விகளை வீசுவார்கள்.
எதிர் முனையில் இருக்கும் பெண்களோ, ‘கேட்பதும் நம்மைப் போன்ற இளம் பெண்தானே’ என்று சில வார்த்தை களை விட்டு விடுவார்கள்.
அதைத் வைத்தே மெதுவாக லெஸ்பியன் உறவு பற்றிப் பேச்சு எடுப்பார்கள். அதில் மயங்கும் பெண்களுக்கு அழைப்பு விடுப்பார்கள்.
அந்தப் பெண் ஒப்புக் கொண்டு மெசேஜ் தட்டி விட்டால் போதும்... தங்களது உண்மையான முகத்தைக் காண்பித்து, அந்தத் தகவலை ‘ஃபேஸ்புக்’ பதிவை வெளியிட்டு விடுவேன் என்று சொல்லியே பல பெண்களை வழிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
“அம்மா, இதோ உன் மருமகள்!”
இன்னொரு பக்கம் உறவினர், நண்பர்கள் மூலமாக அறிமுகமாகும் பெண்கள் என்று எல்லோரிடமும் நட்பு அல்லது காதல் என்ற பெயரில் மொபைல் எண்களை வாங்கிப் பேசுவார்கள், பழகுவார்கள்.
காதலிக்கத் தொடங்கும் பெண்ணிடம் நம்பிக்கை ஏற்படுத்துவ தற்காக, பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு வேலைக்கு இருக்கும் வயதான பெண்களையே ‘செட்டப்’ அம்மாவாக்கி, ‘அம்மா, இது தான் உன் மருமகள்’ என்று அறிமுகப் படுத்துவார்கள்.
இதை நம்பி, அந்தப் பெண்கள் இவர்கள் கூப்பிடும் இடங்களுக்குச் செல்வார்கள். நண்பன் அல்லது காதலன் என்ற பெயரில் ஒருவன் தான் அழைத்துச் செல்வான்.
பெரும்பாலும் வார வேலை நாள்களில், ஆள் அரவமின்றி இருக்கும் தென்னந் தோப்புகளில் உள்ள தோட்டத்து பங்களாக்கள் அல்லது ரிசார்ட் களுக்கு கார்களில் அழைத்துச் செல்வார்கள்.
அறைக்குள் போனதும், நண்பனே மிருகமாக மாறி, அந்தப் பெண்ணைச் சீரழிக்கத் தொடங்குவான். அதை வீடியோ எடுப்பதற்கு, ஏற்கெனவே அங்கு ஒரு கும்பல் ஒளிந்திரு க்கும்.
பின்பு எல்லோரும் சேர்ந்து, அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து, அதையும் வீடியோ எடுத்து விடுவார்கள். பணக்காரப் பெண்ணாக இருந்தால், அதைக் காண்பித்துப் பணம் பறிப்பார்கள்.
ஏழைப் பெண்ணாக இருந்தால், வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்வதுடன், வசதி படைத்தவர்கள், அரசியல் வாதிகள் என்று பலருக்கும் அனுப்பி வைத்து, தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள்.
கடந்த ஏழாண்டு களில் பள்ளி மாணவிகள் தொடங்கி, திருமணமான பெண்கள் வரை சிக்கி யுள்ளனர்” என்று சொன்னவர்கள், இதில் பாதிக்கப் பட்ட சிலர் பற்றியும் நம்மிடம் சொன்னார்கள்.
பிரபலப் பள்ளியின் பெண் தாளாளர், ஒரு கல்லூரிப் பேராசிரியர், இரண்டு பிளஸ் 2 மாணவிகள் என இதுவரை குறைந்தது 200 பெண்கள் இவர்களின் வலையில் சிக்கியிருப்பர்.
வசதி படைத்த இரு டாக்டர்களின் மனைவியரும் இவர்களிடம் சிக்கி யுள்ளனர். ஒருவரிட மிருந்து மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் வரையும், மற்றவரிடம் 50 லட்ச ரூபாய் வரையும் பறித்துள்ளனர்.
இந்த இளைஞர்களில் ஒருவரின் உறவினர் நர்ஸ். அவருக்கு இந்தக் கும்பலின் அத்தனை நடவடிக்கை களும் தெரியும். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அழகாக இருப்பார்.
அவரை அழைத்துச் சென்று, மது குடிக்க வைத்து, நாசப்படுத்தி யுள்ளனர். அந்தப் பெண் கர்ப்பமானதும் அதைக் கலைப்பதற்கு இந்த நர்ஸ் உதவி யுள்ளார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரத்தில், ஒரே ஆண்டில் ஏழு இளம் பெண்கள், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் வழக்குகள் அனைத்தும் காதல் தோல்வி, வயிற்று வலி என்று முடிக்கப் பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கும்பலிடம் சிக்கித் தான் தற்கொலை செய்து கொண்டிருப் பார்களோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.
ஆளும் கட்சி ஆதரவு!
ஊர்ப்பெயரை அடை மொழியாகக் கொண்ட ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் மகன்கள் இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.
அதில் இளைய மகன், வால்பாறையில் இதே போன்று ஒரு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த போது, அந்தப் பெண் சத்தம் போட்டதில் மக்கள் கூடி விட்டனர்.
அவன் தப்பி விட்டான். பெண்கள் விஷயத்தில் படு வீக்கான நகராட்சியின் முக்கியப் பிரமுகருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் தான், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி–க்கு மாற்ற வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இந்தப் போராட்ட த்துக்கு அ.தி.மு.க., பி.ஜே.பி இரு கட்சிகள் மட்டும் ஆதரவு தரவில்லை. இதுவே சந்தேகத்தை வலுப்படுத்து கிறது.
தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே இதை அமுக்கப் பார்க்கிறது காவல்துறை’’ என்றார்கள் கொந்தளிப்புடன்!
அந்த இளைஞர்க ளிடம் இருந்த அத்தனை வீடியோக் களையும் போலீஸார் வாங்கி விட்டதாகவும், அதை வைத்து சம்பந்தப் பட்டவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான வேலை தொடங்கி விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் சந்தேகம் கிளப்பி யுள்ளனர்.
இது தொடர்பாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், “இந்தச் செய்தி வெளியானதிலிருந்து பொள்ளாச்சி மக்கள் கடும் வேதனையில் உள்ளனர்.
கைது செய்யப்படும் முன்பு திருநாவுக்கரசு வெளியிட்ட ஆடியோவில், ‘இதில் அரசியல் தொடர்புகள் உள்ளன. என் உயிரே போனாலும் அதை வெளியில் சொல்வேன்.
போலீஸ், ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எல்லோரும் எனக்கு ஆதரவு தரவேண்டும்’ என்று கூறினார். எனவே, இதில் ஆளுங் கட்சியினரின் தொடர்புகள் இருப்பதாகப் பொள்ளாச்சி முழுக்கப் பேச்சு ஓடுகிறது.
பயங்கரமான கதைகளை எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு விடம் அந்த ஆடியோ தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்பட வில்லை.
உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது போலீஸ். இதில் தொடர் புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக கோவை எஸ்.பி பாண்டிய ராஜனிடம் பேசினோம். “இந்த வழக்கை போலீஸ் சரியாக கையாண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததும் குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்து விட்டோம்.
தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு வும் கைது செய்யப்பட்டு விட்டார். தவிர, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை மிரட்டிய திருநாவுக்கரசு வின் நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளோம்.
இது சென்சிட்டிவான விஷயம் என்பதால் வீடியோ க்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்காது. இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்க வேண்டும்.
அப்போது தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். மற்றபடி, இதில் அரசியல் தலை யீடுகளோ அழுத்தங்களோ கிடையாது” என்றார்.
இதற்கிடையே ஆளுங் கட்சியினரைக் காப்பாற்று வதற்காக, குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் முடிவு செய்திருப்ப தாகத் தெரிய வந்துள்ளது.
சமூகத்தில் பெண்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்வது காவல் துறையின் கடமை. இதில் காவல் துறையின் கைகளைக் கட்டிப் போடாமல் நேர்மை யாகவும் சுதந்திர மாகவும் செயல்பட அனுமதிப்ப திலேயே தமிழக அரசின் மாண்பு அடங்கி யிருக்கிறது!
– சே.சேவியர் செல்வக்குமார், எம்.புண்ணிய மூர்த்தி
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பொள்ளாச்சி அ.தி.மு.க எம்.பி மகேந்திரன், "மன்னிக்கவே முடியாத குற்றம் நடந்துள்ளது. மனசாட்சி உள்ள யாருமே இந்தப் பாதகத்தை ஆதரிக்க மாட்டார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பொள்ளாச்சி அ.தி.மு.க எம்.பி மகேந்திரன், "மன்னிக்கவே முடியாத குற்றம் நடந்துள்ளது. மனசாட்சி உள்ள யாருமே இந்தப் பாதகத்தை ஆதரிக்க மாட்டார்கள்.
இதற்கும் ஆளும் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாகப் பரப்பப்படும் தகவல் பொய். புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைப் புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ‘பார்’ நாகராஜன்,
அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன். இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாய மாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வழக்கு களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை எஸ்.பி பாண்டிய ராஜனை நேரில் சந்தித்து அறிவுறுத்தி யுள்ளேன்.
நிச்சயம் இந்தக் குற்றவாளி களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம்" என்றார்... விகடன்..
Thanks for Your Comments